சூதாட்டப் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை!

சூதாட்டப் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை!
சூதாட்டப் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை!
Published on

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய ஐபிஎல் போல பாகிஸ்தானில், பிசிஎல் எனும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. கடந்த வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த போட்டியில் சூதாட்ட புகார், பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதில் பல வீரர்கள் சிக்கினர். அதில் ஒருவரான நசீர் ஜாம்ஷெட் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

இந்த சூதாட்டம் தொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவும் இணைந்து இதுபற்றி மேலும் விசாரித்து வந்  தது. தொடக்க வீரர் ஷர்ஜீல் கான், காலித் லடீஃப், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நசீர் ஜாம்ஷெட் ஆகியோருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரி யம் இடைக்காலத் தடை விதித்தது. 

சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இவர்கள் மீது முறையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்தார் நசீர் ஜாம் ஷெட். இந்நிலையில் அவர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டதாகக் கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு 10 வருட தடையை விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com