சூதாட்ட புகார் காரணமாக, பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடந்தது. இதில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து 3 பேர் கொண்ட குழுவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அமைத்து விசாரித்து வருகிறது. இதில் சர்ஜில் கான், காலித் லத்தீஃப் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான், ஆல் ரவுண்டர் நவாஸ் ஆகியோர் 6 மற்றும் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.