பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம்!

33 ஆவது ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் நேற்று ஏற்றப்பட்டது.
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட காட்சி
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட காட்சிமுகநூல்
Published on

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. நடக்கவுள்ள இந்த 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில் இதற்கான ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் தொடங்கப்பட்ட இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் நேற்று (16.4.2024) பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டது.

ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட காட்சி
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட காட்சி

பண்டைய கிரேக்க கடவுள் ஸீயஸின் மனைவி ஹெராவின் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பில் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், பாரீஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அவர்களில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் பேசுகையில், “இந்த கடினமான காலத்தில் உலகில் மோதல், போர்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் அவர்கள் எதிர்கொள்ளும் வெறுப்பு போன்ற எதிர்மறையான செய்திகளால் சோர்வடைந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டில் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது 3ஆவது முறையாக கோடைக்கால ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற இருக்கிறது.

எப்படி தீபம் ஏற்றப்பட்டது?

வழக்கமாக, சூரிய ஒலிக்கதிர்களை குவிலென்சின் உதவி கொண்டு வெப்பத்தை உருவாக்கி அதிலிருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

ஆனால், நேற்றைய தினம் மேகமூட்டமாக காணப்பட்டதால் மாற்று ஏற்பாடாக சிறிய பாத்திரத்தில் நெருப்பு மூட்டப்பட்டு அதிலிருந்து தீபம் ஏற்றப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட இப்பாத்திரம், கிரேக்க முறைப்படி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் தீபம் எங்கெங்லாம் பயணப்பட இருக்கிறது?

தலைமை குருவாக வேடமிட்ட நபரிடமிருந்து பற்றவைக்கப்பட்ட இந்த தீபத்திலிருந்து, முதலில் கிரீஸ் துடுப்பு படகு வீரர் ஸ்டீபனோஸ் நிடோஸ்கோஸும், பின்னர் பிரான்ஸ் நீச்சல் வீராங்கனை லாரே மனவ்டோவும் சிறிது தூரம் தீபத்தை தொடர் ஓட்டமாக எடுத்துச் சென்றனர்.

ஒலிம்பிக் சுடரை எடுத்துச் சென்ற லாரே மனவ்டோ - ஸ்டீபனோஸ் நிடோஸ்கோஸ்
ஒலிம்பிக் சுடரை எடுத்துச் சென்ற லாரே மனவ்டோ - ஸ்டீபனோஸ் நிடோஸ்கோஸ்

கிரீஸ் நாடு முழுவதும் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் கமிட்டியிடம் ஏப்ரல் 26 ஆம் தேதி ஒப்படைக்கப்படும்.

ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட காட்சி
KKRvRR | 'Take a bow'.. உயிரை கொடுத்து வென்ற பட்லர்! முடிவில் தோனியிடம் தோற்ற கம்பீர்! என்ன நடந்தது?

பிறகு மே 8 ஆம் தேதி பிரான்ஸின் மார்சிலே நகரை அடையும் நிலையில், பிரான்ஸ் நாடு முழுவதும் 68 நாள்கள், 65 பிராந்தியங்கள், 66 நகரங்களில் பயணப்பட்டு ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் கைகளில் தீபம் தவழ இருக்கிறது.

இறுதியாக, ஜூலை 26 ஆம் தேதி தொடக்க விழா நடைபெறும் பாரிஸுக்கு வர வழைக்கப்பட்டு தீப கொப்பரையில் ஏற்றப்படும். அதன்பின்னரே போட்டி தொடங்கப்படும். இந்த ஒலிம்பிக் போட்டியில், 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com