கோபா அமெரிக்கா: சிலியை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது பராகுவே

கோபா அமெரிக்கா: சிலியை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது பராகுவே
கோபா அமெரிக்கா: சிலியை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது பராகுவே
Published on

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், சிலியை வீழ்த்தி, கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்தது பராகுவே.

பிரேசிலில் நடைபெற்று வரும் இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பராகுவே மற்றும் சிலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் பராகுவே வீரர் அல்மிரான் அடித்த கார்னரை, தலையால் முட்டி கோல் அடித்தார் பிரேயையன் சமாமுடியோ.

ஆட்டத்தின் பிற்பாதியில், கிடைத்த பெனால்டிக் வாய்ப்பை பயன்படுத்தி அல்மிரான் கோல் அடிக்க, பராகுவே 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com