இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா விளையாடி வருகிறது. இரண்டாவது பயிற்சி ஆட்டத்தின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 472 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதற்கு காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தான். மயங்க், கில், விஹாரி மற்றும் பண்ட் என இளம் வீரர்கள் ஆஸ்திரேலிய ஏ அணியின் பந்து வீச்சை கூலாக எதிர்த்து விளையாடினர். அதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பண்ட் இரண்டவது இன்னிங்சில் 73 பந்துகளில் 103 ரன்களை அதிரடியாக விளாசியுள்ளார்.
ஃபார்ம் அவுட்டாகியிருந்த அவர் இந்த ஆட்டத்தை சிறப்பாக விளையாடியதன் மூலம் இழந்த ஃபார்மை மீட்டெடுத்து வந்துள்ளார். அவரது இன்னிங்சில் 6 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். 90 ஓவர்கள் விளையாடிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 88 ஓவர்கள் முடிவில் 62 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்தார். மீதம் இரண்டு ஓவர்கள் மட்டும் இருந்ததால் சதம் அடிக்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.
89வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த ரிஷப் பண்ட், கடைசி ஓவரில் மட்டும் பண்ட் 22 ரன்களை பண்ட் விளாசினார். கடைசி ஓவரின் முதல் பந்து டாட் ஆன நிலையில், அடுத்த 5 பந்துகளில் முறையே பவுண்டரி, பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி, பவுண்டரி என விளாசி தள்ளினார். சினிமா ஹீரோ போல கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சதம் விளாசினார் பண்ட்.