மானம் காத்தார் பாண்ட்யா: காலிஸ் கணிப்பு சரிதான்!

மானம் காத்தார் பாண்ட்யா: காலிஸ் கணிப்பு சரிதான்!
மானம் காத்தார் பாண்ட்யா: காலிஸ் கணிப்பு சரிதான்!
Published on

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் மானம் காத்தார் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவரை பற்றி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் காலிஸ் கணித்தது சரிதான் எனத் தெரிய வந்துள்ளது. 

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, கேப் டவுனில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 286 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஹர்திக் பாண்ட்யா தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவருக்கு புவனேஷ்வர் குமார் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தது. புவனேஷ்வர் குமார் 25 (112) ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த பாண்ட்யா 93 (95) ரன்னில் அவுட் ஆனார். இதில் ஒரு சிக்சரும், 14 பவுண்டரிகளும் அடங்கும். பாண்ட்யா ஆட்டமிழந்த போது இந்திய அணி 199 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 10 ரன்கள் சேர்ப்பதற்கு இந்திய அணி மீதமுள்ள விக்கெட்டையும் இழந்து, 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 பின்னர், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 65 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. மார்க்ரம் 34 (43), எல்கர் 25 (54) ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்கள் விக்கெட்டுகளையும் பாண்ட்யா வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் கவுரவமான ஸ்கோரை எட்டவும், தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களை வீழ்த்தியதன் மூலமும் ஆல்ரவுண்டராக ஜொலித்தார் பாண்ட்யா.

’தென்னாப்பிரிக்கத் தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடுவார்’ என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காலிஸ் கணித்திருந்தார். அவர் கணிப்பு சரியாகி இருக்கிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com