5-வது பவுலராக குர்ணால் பாண்ட்யாவை ஏற்றுக்கொள்ள முடியாது - சுனில் கவாஸ்கர் விமர்சனம்

5-வது பவுலராக குர்ணால் பாண்ட்யாவை ஏற்றுக்கொள்ள முடியாது - சுனில் கவாஸ்கர் விமர்சனம்
5-வது பவுலராக குர்ணால் பாண்ட்யாவை ஏற்றுக்கொள்ள முடியாது - சுனில் கவாஸ்கர் விமர்சனம்
Published on

குர்ணால் பாண்ட்யா 10 ஓவர்கள் வீசும் ஒரு பவுலராக இருக்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய 2 வது ஒருநாள் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை புனேயில் நடந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. எனவே தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா இதுவரை ஒரு பந்து கூட வீசவில்லை. இங்கிலாந்தில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் ஹார்திக் பாண்ட்யாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவரை பந்துவீச அனுமதிக்கவில்லை என்று அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்தார். அதேசமயம் மற்றொரு ஆல்-ரவுண்டரான குர்ணால் பாண்ட்யா நேற்றைய ஆட்டத்தில் 6 ஓவர்களை வீசி 72 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ‘’ இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை கிழித்து பென் ஸ்டோக்ஸ் தொங்கவிட்டார். இந்திய பந்துவீச்சு கொஞ்சம் பலவீனமாக இருந்தது என்று நான் கூறுவேன். ஏனென்றால் குர்ணால் பாண்ட்யா ஐந்தாவது பந்து வீச்சாளராக இருக்க முடியாது. அவர் 10 ஓவர்கள் வீசும் ஒரு பவுலராக இருக்க முடியாது. இதுபோன்ற ஆடுகளங்களில் உங்களுக்கு சாஹல் போன்ற ஒரு பந்து வீச்சாளர் தேவை.

ஹர்திக் பாண்ட்யா மற்றும் குர்னால் பாண்ட்யா இருவரும் இணைந்து 10 ஓவர்கள் வீச அனுமதிக்கலாம். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அடுத்த போட்டியில் வெற்றிபெற வேண்டுமானால் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்து வீச்சாளர்களைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கும்" என்று கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.

பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் மீது எந்த அழுத்தமும் இல்லை. இந்திய அணியில் சாஹல் அல்லது ரவீந்திர ஜடேஜா போன்ற ஒரு ஸ்பின் பந்து வீச்சாளர் இருந்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com