"சூதாட்டத் தரகரை பாக். கிரிக்கெட் வாரியம் அறிந்திருந்தது" டேனிஷ் கனேரியா

"சூதாட்டத் தரகரை பாக். கிரிக்கெட் வாரியம் அறிந்திருந்தது" டேனிஷ் கனேரியா
"சூதாட்டத் தரகரை பாக். கிரிக்கெட் வாரியம் அறிந்திருந்தது" டேனிஷ் கனேரியா
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதன் வீரர்களும் சூதாட்டத் தரகர் பற்றி அறிந்திருந்ததாக முன்னாள் வீரர் தனேஷ் கனேரியா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து உள்ளூர் போட்டி ஒன்றில் நடைபெற்ற சூதாட்டத்தில் தொடர்பு‌டைய இடைத்தரகர் பல முறை பாகிஸ்தானுக்கு சென்றதாகவும், அவரை பாகிஸ்தான் வீரர்கள் நன்கு தெரிந்திருந்ததாகவும் கனேரியா குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டையே சூதாட்டத்திற்காக விற்று, சிறைக்கு சென்றவர்களை கிரிக்கெட் வாரியம் வரவேற்றதாகவும் கனேரியா குற்றம் சாட்டியுள்ளார்.

இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகார் தொடர்பாக கனேரியாவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com