வீரர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளித்தால் மட்டுமே உலகக்கோப்பை ஹாக்கியில் விளையாட இந்தியா வருவோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பை ஹாக்கி போட்டி 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் புவனேஸ்வரில் நடைபெறவுள்ளது. இதில் உலக நாடுகளின் ஹாக்கி அணிகள் அனைத்தும் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை ஹாக்கியில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் நிபந்தனைகள் விதித்துள்ளது. அதில் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிப்பதுடன், விசா நடைமுறையையும் இந்தியா எளிதாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், உலகக்கோப்பை ஹாக்கியில் விளையாட மாட்டோம் என்றும் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் எச்சரித்துள்ளது.