முதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை

முதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை
முதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை
Published on

இலங்கைக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. அடுத்து டி-20 தொடர் நடக்கிறது. முதல் டி-20 போட்டி, லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குணதிலகா 57 ரன்களும் பெர்னாண்டோ 33 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில், முகமது ஹஸ்னைன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

 பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. அந்த அணி 17.4 ஓவரில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் பானுகா ராஜபக்ச, துசான் சனகா, சேஹன் ஜெயசூர்யா ஆகியோரின் விக்கெட்டுகளை ஹாட்ரிக்-காக வீழ்த்திய, பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன் சாதனை படைத்துள்ளார். மிகக் குறைந்த வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவரது வயது 19. ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், தனது 20 வது வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com