வெஸ்ட் இண்டீஸ் வீரரை தாக்க முயன்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - வைரலாகும் வீடியோ !

வெஸ்ட் இண்டீஸ் வீரரை தாக்க முயன்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - வைரலாகும் வீடியோ !
வெஸ்ட் இண்டீஸ் வீரரை தாக்க முயன்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - வைரலாகும் வீடியோ !
Published on

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டியில் ஆல் ரவுண்டர் கீமோ பாலை பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஆசிப் அலி தாக்க முற்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

சிபிஎல் டி20 தொடரின் நேற்றையப் போட்டி, ஜமாய்கா டாலவாஸ் மற்றும் பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் இடையே நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஜமாய்கா டாலவாஸ் அணிக்காகவும், கீமோ பால் பார்படோஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். அப்போது கீமோ பால் பவுலிங்கில் ஆசிப் அலி சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் அது கேட்ச் ஆகி அவுட்டானார். இதனை கீமோ பால் கொண்டாடினார்.

இதனால் கடுப்பான ஆசிப் அலி தன்னுடைய பேட்டால் கீமோ பால் முகத்தில் அடிப்பது போல வீசினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கீமோ பால் அதிர்ச்சியடைந்தார். ஆசிப் அலியின் இத்தகைய செயல் கிரிக்கெட்டின் விதியை மீறுவதாக இருப்பதாக விரைவில் அவரின் செயலுக்கு தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com