தொடக்க ஆட்டக்காரர்களே சிஎஸ்கேவின் பலம் ! மாற்றத்திற்கு காத்திருக்கும் தோனி

தொடக்க ஆட்டக்காரர்களே சிஎஸ்கேவின் பலம் ! மாற்றத்திற்கு காத்திருக்கும் தோனி
தொடக்க ஆட்டக்காரர்களே சிஎஸ்கேவின் பலம் ! மாற்றத்திற்கு காத்திருக்கும் தோனி
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தது. இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே சந்திக்கும் முதல் தோல்வி இது. சிஎஸ்கே அணி தொடர்ந்து பெற்ற மூன்று வெற்றிகள் காரணமாக உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் சற்றே சோர்வடைந்துள்ளனர். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. பின்னர், 171 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வரும் சென்னை அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதில் அம்பத்தி ராயுடு தான் சந்தித்த முதல் பந்தில் ஆட்டமிழந்தார். வாட்சன் 3 ரன்னில் ஆட்டமிழக்க, சற்று நேரம் தாக்கு பிடித்த ரெய்னா 16 ரன்னில் வெளியேறினார்.

இந்தத் தொடரில் சிஎஸ்கே மூன்று வெற்றிகளை பெற்றிருந்தாலும், அந்த வெற்றிகள் எல்லாம் நடுவரிசை பேட்ஸ்மேன்கள், பவுலர்களின் புண்ணியத்தில் கிடைத்துதான். ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சொதப்பிதான் வருகிறார்கள். சிஎஸ்கே அணி மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அந்த மூன்று முறையும் சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரர்கள், அந்தத் தொடர் முழுவதும் ரன் மழையை பொழிந்து இருப்பார்கள். ஆனால் இந்த ஐபிஎல் நான்கு போட்டியிலும் வாட்சனும், ராயுடுவும் சொதப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் ஷேன் வாட்சன் மொத்தமாக 62 ரன்களும், அம்பத்தி ராயுடு 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். இது சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த இருவருக்கு பதிலாக ஷாம் பில்லிங்ஸ், முரளி விஜய் உள்ளிட்ட யாருக்கேனும் வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும், ஐபிஎல் தொடக்க காலத்தில் இப்போதைய சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் - அனிருத்தா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பின்பு, மேத்யூ ஹேடன் - முரளி விஜய் தொடக்க ஜோடியாக கலக்கினார்கள். பின்பு, மைக் ஹஸி - முரளி விஜய் ஜோடி படைக்காத சாதனைகளே இல்லை.

பின்பு, மெக்கல்லம் - டூ ப்ளசீஸ் அதிரடி காட்டினார். ஏன், கடந்தாண்டு கூட ஷேன் வாட்சன் - அம்பத்தி ராயுடு சிறப்பாகவே விளையாடினார்கள். அதனால்தான், கடந்தாண்டு ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வசமானது. ஆனால், ஐபிஎல் வரலாற்றில் ஓராண்டு சிறப்பாக விளையாடும் தொடக்க ஜோடிகள், அடுத்த சீசனில் சொதப்பும். இது தோனிக்கும் நிச்சயம் தெரிந்தே இருக்கும்.

நிச்சயம் எதிர் வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணியில் மாற்றங்கள் நிகழும். சிஎஸ்கே அணியை சோதிக்க இன்னும் நிறைய போட்டிகள் இருக்கிறது. சிஎஸ்கேவுக்கு அடுத்தப் போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாபுடன் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் நிச்சயம் சிஎஸ்கே மீண்டு வரும் என கண்டிப்பாக நம்பலாம்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com