இதனையடுத்து நான்காம் நாள் முடிவில் இந்தியா 131 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. மறுநாள் கௌதம் கம்பீர் 66, டிராவிட்4, லட்சுமண் 26 ரன்களில் ஆட்டமிழக்க, சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினார். தன் கிரிக்கெட் வாழ்வில் மீண்டுமொரு பிரஷர் இன்னிங்ஸ்க்கு தயாரானார். அவரோடு ஐந்தாவது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்திருந்தார் யுவராஜ் சிங். ஒரு பக்கம் சச்சின் பொறுப்பாகச் சீரான வேகத்தில் ரன் சேர்த்துக்கொண்டிருக்க, யுவராஜ் சிங்கோ தாறுமாறாக ஷாட்டுகளை அடித்துக்கொண்டு இருந்தார். இதில் கடுப்பான சச்சின், யுவராஜிடம் சென்று "இது சுழல் பந்துக்கு ஏதுவான ஆடுகளம்,ல இப்படி பொறுப்பில்லாமல் ஆடக் கூடாது. நீ அவுட்டாகிவிட்டால், அடுத்த வருபவரால் இந்த பிட்சை புரிந்துகொள்ள முடியாது. அதனால் நாம் இருவரும் சேர்ந்து இந்த ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும்" என்றார்.