அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீஸனில் அனைத்திற்கும் மூன்றாவது அம்பயரை நாடுவதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளனர் ஆன் ஃபீல்ட் அம்பயர்கள்.
வழக்கமாக ஃபீல்டிங் செய்கின்ற அணிகள் ‘சத்தியமா அவுட் அம்பயர்’ என சொல்லும் அளவிற்கு உறுதியாக அப்பீல் செய்யும்போது மட்டும் அம்பயர்கள் மூன்றாவது அம்பயரின் உதவியை நாடுவார்கள். சமயங்களில் தங்கள் முடிவுகளில் சந்தேகம் இருந்தாலும் கள அம்பயர்கள் மூன்றாவது அம்பயரிடம் தொழில்நுட்ப உதவிகளை நாடுவார்கள்.
ஆனால் இந்த சீஸனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்து வீசியபோது, பேட்ஸ்மேன் அவுட் என சொல்லிவிட்டு அந்த முடிவை மீண்டும் மூன்றாவது அம்பயர் மூலமாக தெரிந்து கொண்டு அவுட் இல்லை என சொன்ன சம்பவம் அரங்கேறியுள்ளது.
அது மட்டுமல்லாது சின்ன சின்ன ரன் அவுட், ஷார்ட் பால் என அனைத்திற்கும் கள அம்பயர்கள் மூன்றாவது அம்பயரை நாடுகின்றனர்.
இது தொழில்நுட்பத்தை சிறப்பாக அம்பயர்கள் கையாளுகிறார்கள் என சொன்னாலும், சமயங்களில் அதுவே ஆட்டத்தின் போக்கையும் மாற்றி விடுகிறது எனவும் விமர்சிக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.