வெள்ளி பதக்கம் கேட்டு வினேஷ் போகத் மேல்முறையீடு... இன்று தீர்ப்பு

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு செய்துள்ளார்.
வினேஷ் போகத்
வினேஷ் போகத்புதிய தலைமுறை
Published on

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு செய்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்த காரணத்தால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை, சர்வதேச மல்யுத்த சங்கம் ஏற்க மறுத்தது.

இந்நிலையில் தற்போது, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்று வினேஷ் போகத் மேல்முறையீடு செய்துள்ளார்.

வினேஷ் போகத்
குறுகிய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது சரியா; என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்? நிபுணர்கள் சொல்வதென்ன?

முதலில் தங்கத்திற்கான போட்டியை நிறுத்தி வைத்து அதில் பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் போட்டியை நிறுத்தி வைக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியதன் காரணமாக, வெள்ளி பதக்கத்தை வழங்க வேண்டும் என வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார். இதனை ஏற்ற நீதிமன்றம், இன்று இடைக்கால தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com