பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்முகநூல்

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய இந்தியாவால் ஏன் ஒலிம்பிக்கில் வாங்க முடியவில்லை?

பாரிஸ் நகரில் தற்போது நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக 117 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் ஒரு வெள்ளி 5 வெண்கலம் என்று மொத்தம் 6 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் இந்தியா 43-வது இடத்தைப் பெற்றிருந்தது.
Published on

பாரிஸ் நகரில் தற்போது நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக 117 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் ஒரு வெள்ளி 5 வெண்கலம் என்று மொத்தம் 6 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் இந்தியா 43-வது இடத்தைப் பெற்றிருந்தது. இதில், வெறும் 100 கிராம் அதிகரித்த உடல் எடையால் வினேஷ் போகத் பதக்கத்தைத் தவறவிட்டிருந்தார். இது ஒருபுறம் இருக்க.... நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாரா ஒலிம்பிக்ஸில் சத்தமே இல்லாமல் இந்தியா சாதித்து வருகிறது. இன்று வரை நடந்து முடிந்த போட்டிகளில் 6 தங்கம் 9 வெள்ளி 12 வெண்கலம் என்று 27 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் 17வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்ஒலிம்பிக்ஸ் 2024

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்காகப் பல நாடுகள் பில்லியன் கணக்கில் ரூபாயைச் செலவழித்து வீரர்களைப் போட்டிக்கு அனுப்புகிறது. அந்த வகையில் இந்தியா இந்த 2024 ஒலிம்பிக்கிற்காக 470 கோடி ரூபாயை செலவு செய்து இருக்கிறது.

இந்திய அரசாங்கம் செலவு செய்த 470 கோடியில், நீரஜ் சோப்ரா, பி.வி.சிந்து போன்ற சிறந்த வீரர்களாகக் கருதப்படும் 16 துறையைச் சேர்ந்த வீரர்களின் பயிற்சிக்கு ₹5.72 கோடி செலவிடப்பட்டது. இதில் அதிகபட்சமாகத் தடகள விளையாட்டிற்கு மட்டும் 96.08 கோடி ஒதுக்கப்பட்டதாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) மிஷன் ஒலிம்பிக் செல் (MOC) தெரிவித்துள்ளது. காரணம் தடகள போட்டியில் சிறந்த வீரராகக் கருதப்படும் நீரஜ் சோப்ரா, 2022 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம், 2018 காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் என்று பல ஆசிய விளையாட்டுகளில் பதக்கம் வென்றவர்.

நீரஜ் சோப்ரா, மனு பாக்கர்
நீரஜ் சோப்ரா, மனு பாக்கர்

தடகளப் போட்டியில் மட்டும் இத்தனை கோடி செலவு செய்து பயிற்சிபெற்ற வீரர் ஒரு வெள்ளியை மட்டுமே பெற்றிருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதே போல் பேட்மிட்டணில் 2-வது தரவரிசையிலிருந்த பி.வி. சிந்து இந்த முறை கோப்பையைத் தவறவிட்டு தரவரிசையில் 13-வது இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர மனு பாக்கர், மற்றும் ஸ்வப்னில் குசேலே, சரப்ஜோத் சிங், அமன் செஹ்ராவத் ஆகியோர் இந்தியா சார்பில் வெண்கலப் பதக்கங்களை வென்றவர்கள்.

இப்படி ஒலிம்பிக்கில் சில வீரர்களுக்காக அரசாங்கம் கோடி கோடியாகச் செலவழித்து ஏமாற்றத்தை அடைந்த நிலையில், சத்தமேயில்லாமல் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியர்கள் சாதனைபுரிந்து வருகின்றனர்.

இன்றைய நிலவரப்படி பாரா ஒலிம்பிக்கில் 27 பதக்கங்களைப் பெற்று இந்தியா 17-வது இடத்தில் இருப்பது ஒரு ஆறுதலான செய்தியாக உள்ளது.

ஒலிம்பிக்கிற்காகச் செலவு செய்யப்படும் தொகையை விட பாரா ஒலிம்பிக்கிறாக செலவு செய்த தொகை மிகக்குறைவு. இருப்பினும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியர்கள் முன்னேறி வருவது மகிழ்ச்சியான செய்தி.

#BREAKING | பாரா ஆசிய விளையாட்டில் மேலும் ஒரு தங்கம்
#BREAKING | பாரா ஆசிய விளையாட்டில் மேலும் ஒரு தங்கம்

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இவ்வளவு பதக்கங்கள் வெல்வதற்குப் பின் இருக்கும் காரணங்களை ஆராயலாம். முதலில் ஒலிம்பிக்ஸை விடவும் பாரா ஒலிம்பிக்கில் மெடல் ஈவன்ட்ஸ் அதிகம்.

2020 ஒலிம்பிக்கையே எடுத்துக்கொள்வோமே. டோக்கியோவில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக்கில் மொத்தம் 339 மெடல் ஈவன்ட் இருந்தன. அதே சமயம், பாரா ஒலிம்பிக் போட்டியில் 539 மெடல் ஈவன்ட் இருந்தன.

தடகளத்தில் பெரிய அளவில் சாதிக்கும் ஆப்பிரிக்க தேசங்கள் பாரா ஒலிம்பிக் குறித்தெல்லாம் யோசிப்பதே இல்லை. ஆக, நமக்கு பாரா ஒலிம்பிக்கில் சாதிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதைத்தான் இந்த முறை நாம் வாங்கியிருக்கும் மெடல்களும் உறுதி செய்கின்றன.

பாரா ஆசிய விளையாட்டு - இந்தியாவிற்கு தங்கம்
பாரா ஆசிய விளையாட்டு - இந்தியாவிற்கு தங்கம்

கிரிக்கெட் அளவுக்கோ, நீரஜ் சோப்ரா, பிவி சிந்து போன்ற வீரர்களுக்கோ கிடைக்கும் தனியார் ஸ்பான்சர்ஷிப் அளவுக்கு பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து ஸ்பான்ஸர்களை எதிர்பார்க்க முடியாது.

ஆனால், அந்த வீரர்களை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமை. நம் வீரர்கள் மென்மேலும் விருதுகளை வாங்கிக்குவிக்க அவர்களுக்கென பிரத்யேகமான பயிற்சி மையங்களும், நம்பிக்கையுமே தேவை. மத்திய, மாநில அரசுகள் நம் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு இன்னும் சிறப்பான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பார்கள் என நம்புவோம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com