தகுதிநீக்க விவகாரம்|எடை அதிகரிப்புக்கு என்ன காரணம்.. நீதிமன்றத்தில் வினேஷ்போகத் தரப்பு கூறியது என்ன?

பாரிஸ் ஒலிம்பிக்கில், தனது எடை ஏன் திடீரென அதிகரித்தது என்பது தொடர்பாக வினேஷ் தரப்பு, விளையாட்டு தீர்ப்பாயத்தில் முன்வைத்த வாதங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வினேஷ் போகத்
வினேஷ் போகத்ட்விட்டர்
Published on

பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழாவில், மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி ஒலிம்பிக் கமிட்டியால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் உலக அளவில் பேசுபொருளான நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் நாளை (ஆக.13) தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், தனது எடை ஏன் திடீரென அதிகரித்தது என்பது தொடர்பாக வினேஷ் தரப்பு, விளையாட்டு தீர்ப்பாயத்தில் முன்வைத்த வாதங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்ஒலிம்பிக்ஸ் 2024

இதுகுறித்து அவரது தரப்பு வைத்த வாதத்தில், ”அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடியது, ஒலிம்பிக் வீரர்களின் கிராமத்திற்கும் போட்டி அரங்கிற்கும் இடையே உள்ள தூரம் ஆகியவையே எடை அதிகரிக்கக் காரணம். அதாவது, மல்யுத்தப் போட்டி நடைபெறும் இடமான சாம்ப் டி மார்ஸ் அரீனாவிற்கும், ஒலிம்பிக் கிராமத்திற்கும் இடையே அதிக தூரம் இருந்தது. இதன் காரணமாகவே, எடையைத் திட்டமிட்டதுபோலக் குறைக்க முடியவில்லை” என வாதம் வைத்துள்ளது.

இதையும் படிக்க: ”எல்லாமே அமெரிக்காவின் சதி; என் பேச்சை திரித்து வன்முறையை உருவாக்கினார்கள்”-மவுனம் கலைத்த ஷேக் ஹசீனா

வினேஷ் போகத்
”வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் பெற தகுதியானவர்”- முக்கிய பாய்ண்ட் உடன் சச்சின் கொடுத்த ஆதரவுக்குரல்!

மேலும், “ஒரேநாளில் அடுத்தடுத்த போட்டிகளில் கலந்துகொண்ட நிலையில், மறுநாள் 52.7 கிலோவாக எடை அதிகரித்தது. இருப்பினும் அதன்பிறகு எடையைக் குறைக்க போதுமான நேரத்தை வழங்கவில்லை. இரண்டாவது நாள் காலையில் வினேஷின் எடை 100 கிராம் அதிகரித்து இருந்த நிலையில், அதனால் வினேஷுக்கு எந்தவொரு லாபமும் இல்லை. 100 கிராம் எடை அதிகமாக இருப்பது என்பது மிகவும் குறைவு. இது வீரர்களின் எடையில் 0.1 முதல் 0.2 சதவீதம்வரை மட்டுமே. கோடைக்காலத்தின்போது மனித உடல் வீங்குவது எளிதாக ஏற்படலாம்.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்ஒலிம்பிக்ஸ்

ஏனென்றால், அதிக வெப்பம் இருக்கும்போது உயிர் பிழைக்க நமது உடல் அதிக தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்ளும். இதனால் கோடைக்காலத்தில் இயல்பாகவே எடை அதிகரிக்கும். தவிர, ஒரேநாளில் அடுத்தடுத்து மூன்றுமுறை போட்டியிட்டதும் எடை அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம். போட்டிகளுக்குப் பிறகு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட உணவும் இதற்குக் காரணமாக இருக்கலாம். வீரர் எந்தவொரு மோசடியும் செய்யவில்லை. இருந்தாலும் அவரால் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அவரது கடின உழைப்பைக் கருத்தில் கொண்டு வெள்ளிப் பதக்கத்தையாவது வழங்க வேண்டும்" என வினேஷ் போகத் தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தவெக மாநாடு நடத்த இடம் கிடைப்பதில் பிரச்னை நிலவுகிறதா?.. சீமான் சொன்ன பதில்! நடப்பது என்ன?

வினேஷ் போகத்
”பதக்கம் வெல்லவில்லை என்றாலும் வினேஷ் போகத்தை நாம் மறந்துவிடக் கூடாது” - நீரஜ் சோப்ரா ஆதரவுக்குரல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com