ஒலிம்பிக் விதிகள்
ஒலிம்பிக் விதிகள் Facebook

100 கிராம் எடை அதிகம்; போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டுமா? ஒலிம்பிக் விதிகள் சொல்வதென்ன?

சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் உலகக்கோப்பைத் தொடரில் பின்பற்றப்படும் விதிகள் வேறு. ஒலிம்பிக்கிற்கான விதிகள் வேறு. 100 கிராம் எடை அதிகம் என்பதால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படவேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
Published on

செய்தியாளர்: சந்தானகுமார்.

சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் உலகக்கோப்பைத் தொடரில் பின்பற்றப்படும் விதிகள் வேறு. ஒலிம்பிக்கிற்கான விதிகள் வேறு. 100 கிராம் எடை அதிகம் என்பதால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

அதற்கு ஆம் என்கிறது ஒலிம்பிக் போட்டி விதிகள். மல்யுத்த சங்கத்தின் விதி 17ன்படி, போட்டி நடைபெறும் இரண்டு நாட்களிலும் எடையை பரிசோதிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

முதல்நாளில் 30 நிமிடங்கள் வரை தங்கள் எடையை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்படும். இரண்டாவது நாளில் 15 நிமிடங்கள் வரை தங்கள் எடையை பதிவு செய்யலாம். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் உடல் எடை, நடுவர்கள் முன்னிலையில் கணக்கிடப்படும். அப்படி வழங்கப்பட்ட நேரத்தில் உடல் எடையை பதிவு செய்யாத வீரர்கள் அல்லது உடல் எடை அதிகமாக உள்ள வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். தொடரில் கடைசி இடம் பிடித்ததாக அறிவிக்கப்படுவர் என்பதே விதியாக உள்ளது.

அதே விதியில் 2 ஆவது நாள் 2 கிலோ வரை எடை கூடுதலாக அனுமதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்படுகிறது. இது பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது. ஆனால், மல்யுத்த சங்கத்தின் விதியின்படி, உலகக்கோப்பை, உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் மட்டுமே இந்த விதி பின்பற்றப்படுகிறது. ஒலிம்பிக் மற்றும் மல்யுத்த தரவரிசைப் போட்டிகளில், அந்தந்த பிரிவுகளுக்கான எடை இருந்தால் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

ஒலிம்பிக் விதிகள்
குறுகிய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது சரியா; என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்? நிபுணர்கள் சொல்வதென்ன?

இதன் அடிப்படையில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத் உடல் எடை காலை 50.1 ஆக இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வினேஷைப் போலவே, இத்தாலி வீராங்கனை Emanuela Liuzzi, அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எடை இருந்ததால் முதல் சுற்று தொடங்கும் முன்பே தகுதிநீக்கம் செய்யப்பட்டார். மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜூடோ, பளு தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் எடையை கொண்டே போட்டி நடத்தப்படுகிறது. குறைவான எடை உள்ள வீரர்கள் அதிக எடை கொண்ட வீரர்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டால், எளிதாக வென்று விடுவார்கள் காயம் ஏற்படும் என்பதால் எடை பிரிவுகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com