பாரீஸ் ஒலிம்பிக் 9-வது நாள் | இன்று இந்திய வீரர்கள் களமிறங்கும் போட்டிகள் என்னென்ன?

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் 9வது நாளான இன்று இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக்
பாரிஸ் ஒலிம்பிக் முகநூல்
Published on

செய்தியாளர்: சந்தானம்.

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் 9வது நாளான இன்று இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

  • நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் ஆடவர் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் வியாவீர் சித்து மற்றும் அனிஷ் விளையாட உள்ளனர்.

  • பகல் 1.30 மணிக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதி போட்டியில் கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

  • அதேபோல, 1.35 மணிக்கு 3000 மீட்டர் Steeplechase எனப்படும் தடைகளோடு கூடிய ஓட்டப்போட்டியில் இந்திய வீராங்கனை பருள் சவுத்ரி விளையாட உள்ளார்.

  • பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் களம் காண்கிறார்.

பாரிஸ் ஒலிம்பிக்
வயநாடு நிலச்சரிவு| பாலம் கட்டி மக்களை மீட்கும் ராணுவத்திற்கு கடிதம் எழுதிய 3ஆம் வகுப்பு மாணவர்!
  • மாலை 3 மணிக்கு நடைபெறும் குத்துச்சண்டை காலிறுதியில் லவ்லினா போர்கோஹைன், சீனாவின் LI QUIAN-க்கு எதிராக களமிறங்க உள்ளார். கடந்த முறை பதக்கம் வென்ற லவ்லீனா இந்த போட்டியில் வென்றால் பதக்கத்தை உறுதி செய்வார்.

  • மாலை 3.30 மணிக்கு நடைபெறும் பேட்மின்டன் ஒற்றையர் அரை இறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் இரண்டாம் நிலை வீரரான விக்டர் AXELSEN உடன் மோதுகிறார்.

  • 3.35 மணிக்கு நடைபெறும் பாய்மர படகு போட்டியில் விஷ்ணு சரவணன், மாலை 6.05 க்கு நடைபெறும் மகளிர் பாய்மர படகு போட்டியில் நேத்ரா குமணன் ஆகியோர் விளையாட உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com