செய்தியாளர்: சந்தானகுமார்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரின் ஐந்தாவது நாளில் இந்திய வீரர்கள் விளையாடும் போட்டிகள் குறித்து பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரின் 5 ஆவது நாளான இன்று ஆண்களுக்கான 50 மீட்டர் 3P துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் ஸ்வப்னில் குசாலே விளையாடுகின்றனர். மதியம் 12.50 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, எஸ்டோனியா நாட்டின் KRISTIN KUUBA வை எதிர்த்து விளையாடுகிறார்.
பகல் 1.40 மணிக்கு நடைபெறும் ஆண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் இந்தோனேசியா நாட்டின் JONATHAN CHRISTIE யை எதிர்த்து விளையாட உள்ளார். மதியம் 1.30 மணிக்கு இந்திய துடுப்பு படகு வீரர் பல்ராஜ் பன்வர் காலிறுதியில் தோல்வி அடைந்தாலும் ஒட்டுமொத்த ரேங்கிங் வரிசையை முடிவு செய்யும் அரை இறுதியில் பங்கேற்க உள்ளார்.
அதேபோல டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா சிங்கப்பூர் வீராங்கனை zeng jain ஐ எதிர்த்து களம் காண, 3.30 மணிக்கு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், நார்வே நாட்டை சார்ந்த HOFSTAD ஐ எதிர்த்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் களம் காண்கிறார்.
மாலை 3.50 மணிக்கு வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவில் தீபிகா குமாரி, எஸ்டோனியா நாட்டின் PARNAT REENAA வை எதிர்த்தும்,இரவு 9.15 மணிக்கு ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வில்வித்தை வீரர் TARUNDEEP RAAI ,GREAT பிரிட்டன் நாட்டின் TOM HALL ஐ எதிர்த்து விளையாட உள்ளார்.
நள்ளிரவு 11 மணிக்கு பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரனாய் வியட்நாம் நாட்டின் phat LEE ஐ எதிர்த்து விளையாடுகிறார். நள்ளிரவு 12.20 மணிக்கு ஆண்களுக்கான 71 கிலோ குத்து சண்டை போட்டியில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட உள்ளார்.