பாரிஸ் ஒலிம்பிக் 8-வது நாள்| இந்திய வீரர்கள் களமிறங்கும் போட்டிகள் என்ன?

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரின் 8வது நாளான இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக்
பாரிஸ் ஒலிம்பிக் Facebook
Published on

செய்தியாளர்: சந்தானக்குமார்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரின் 8வது நாளான இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் என்னென்ன?

  • நண்பகல் 12.30 மணிக்கு ஆடவர் கோல்ஃப் போட்டியின் மூன்றாவது சுற்று போட்டியில் இந்தியாவின் சூபாங்கர் ஷர்மா, ககன்ஜீத் புள்ளார் ஆகியோர் விளையாட உள்ளனர். அதேபோல, ஆடவர் துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் ஆனந்த் ஜீத் சிங் நருக்கா, மகளிர் பிரிவில் ரைசா தில்லான், மகேஷ்வரி சவுகான் ஆகியோர் விளையாட உள்ளனர்.

  • பகல் 1 மணிக்கு இந்தியாவிற்காக இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று தந்த மனு பாக்கர், 25 மீட்டர் பிஸ்டல் இறுதி போட்டியில் 3வது பதக்கத்திற்காக களமிறங்க உள்ளார்.

  • பகல் 1.50 மணிக்கு தொடங்கும் மகளிர் ஒற்றையர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை பஜன் கவுர், ஜெர்மனி நாட்டைச் சார்ந்த MICCHELE KROPPEN , தீபிகா குமாரி இந்தோனேசியா வீராங்கனை DIAN ANDA CHOIRUNISA-வை எதிர்த்து விளையாட உள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்
பாரீஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தோல்வி
  • மாலை 3.45 மணிக்கு ஆடவர் பாய்மர படகு போட்டியின் 5வது மற்றும் 6வது சுற்று போட்டியில் விஷ்ணு சரவணன் களமிறங்கவுள்ளார். இரவு 7 மணிக்கு மகளிர் பாய்மர படகு போட்டியின் 5வது மற்றும் 6வது சுற்றில் நேத்ரா குமணன் களமிறங்க உள்ளார்.

  • நள்ளிரவு 12.15 மணிக்கு இந்திய குத்துச்சண்டை வீரர் நிஷாந்த் தேவ் தன்னுடைய காலிறுதி போட்டியில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த மார்கோ அலன்சோ alvaras உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com