பாரிஸ் ஒலிம்பிக் 6வது நாள்| இந்திய வீரர்கள் களமிறங்கும் போட்டிகள் என்ன?

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 6வது நாளான இன்று, இந்திய வீரர்கள் விளையாடும் போட்டிகள் குறித்து பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக்
பாரிஸ் ஒலிம்பிக்முகநூல்
Published on

செய்தியாளர் - சந்தானகுமார்

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 6வது நாளான இன்று, இந்திய வீரர்கள் விளையாடும் போட்டிகள் குறித்து பார்க்கலாம்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான கோல்ஃப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் ககன்ஜீத் புல்லார் மற்றும் சுபாங்கர் ஷர்மா ஆகியோர் விளையாட உள்ளனர். மதியம் 1 மணிக்கு நடைபெறும் ஆண்களுக்கான 50 மீட்டர் 3P துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே விளையாட உள்ளார். ஆண்களுக்கான வில்வித்தை முதல் சுற்றுப்போட்டியில் பிரவீன் ஜாதவ் சீனாவின் KOA WENCHAOவை எதிர்த்து விளையாட உள்ளார்.

மதியம்1.30 மணிக்கு நடைபெறும் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை NIKHAT ZAREEN சீனாவின் WU YU வை எதிர்த்து விளையாட உள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்
ஒலிம்பிக்கில் இன்று IND: ஸ்வப்னில் முதல் லவ்லினா வரை.. 6 பதக்கங்களை நோக்கி முன்னேறிய இந்திய வீரர்கள்

மாலை 3.30 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான 50 மீட்டர் 3P துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் SIFT KAUR மற்றும் ANJUM MOUDGIL ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com