பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024| இந்தியா இன்று களமிறங்கும் போட்டிகள் என்னென்ன?

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று களமிறங்கும் போட்டிகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்முகநூல்
Published on

பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெறும் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜித் சிங் இணை வெற்றிக்கொடி நாட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று களமிறங்கும் போட்டிகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் போட்டிகள் இன்று 4 ஆவது நாளாக நடைபெற உள்ளன. இதில் முதலாவதாக துப்பாக்கி சுடுதல் மகளிர் டிராப் பிரிவில் ஷ்ரேயஸி சிங், ராஜேஸ்வரி குமாரி இணை களமிறங்குகிறது. கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடைபெறுகிறது.

இதில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜித் சிங் ஜோடி களமிறங்குகிறது துடுப்புப்படகு போட்டியில் தகுதிச்சுற்றில் பின் தங்கினாலும் மறு வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு விடாப்பிடியாக முன்னேறிய பல்ராஜ் பன்வர் பங்கு பெறும் காலிறுதி போட்டியும் இன்றுதான் நடக்கிறது. அடுத்து வில்வித்தையில் எலிமினேஷன் அதாவது தகுதியிழப்பு சுற்றில் அங்கிதா பகத் போலந்து வீராங்கனையையும் பஜன் கவுர் இந்தோனேஷிய வீராங்கனையையும் எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ஹாக்கியில் இந்திய அணி அயர்லாந்துடன் மோதுகிறது. பேட்மின்டனில் ஆண்கள் இரட்டையர் குரூப் சுற்றில் சாத்விக் ரெட்டி, சிராக் ஷெட்டி இணை இந்தோனேஷிய இணையை எதிர்த்து களம் காண்கிறது பேட்மின்டன் பெண்கள் இரட்டையர் குரூப் சுற்றில் தனிஷா கிரஸ்டோ, அஷ்வினி பொன்னப்பா, ஆஸ்திரேலிய இணையுடன் மோத உள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
நூலிழையில் பறிபோன பதக்கம்.. இதயம் உடைந்த பட்டியலில் PT உஷா, மில்கா உடன் இணைந்த அர்ஜுன் பபுட்டா!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் இன்று களம் காண்கிறார். 51 கிலோ பிரிவு ஆரம்ப சுற்று போட்டி ஒன்றில் ஜாம்பியா வீரருடன் மோதுகிறார். குத்துச்சண்டையில் பெண்களுக்கான 57 கிலோ பிரிவு ஆரம்பச்சுற்று போட்டி ஒன்றில் பிலிப்பைன்ஸ் வீராங்கனையை இந்தியாவின் ஜெய்ஸ்மின் சந்திக்கிறார்.

வில்வித்தையில் ஒற்றையர் தகுதியிழப்பு சுற்றில் தீரஜ் பொம்மதேவரா விளையாட உள்ளார் 4ஆம் நாளில் இந்தியா பங்குபெறும் கடைசி போட்டி நள்ளிரவு 1 மணிக்கு தொடங்குிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் கொலம்பிய வீராங்கனையுடன் இந்தியாவின் பிரீதி மோதுகிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com