UWW விதிமுறைகளில் சிலஓட்டைகள்! இப்படி வாதிட்டால் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு

UWWஇன் விதிமுறைகளிலும் ஒருசில ஓட்டைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் வெல்வதற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
வினேஷ் போகத்
வினேஷ் போகத்ட்விட்டர்
Published on

பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழாவில், மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி ஒலிம்பிக் கமிட்டியால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் உலக அளவில் பேசுபொருளான நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் இன்று (ஆக.13) தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், வினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கில் திடீரென ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு (UWW ) எதிர்ப்பு தெரிவித்து இருப்பது வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்web

இதுகுறித்து அந்த அமைப்பு, "விதிகளின்படி, இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தவர் மட்டுமே முறையீடு செய்ய முடியும். வினேஷ் போகத்தின் போட்டி முடிவு கைவிடப்பட்டது. பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார். எனவே மேல்முறையீடு செய்ய அனுமதிப்பது சரியான முடிவாக இருக்காது" என UWW எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், UWW இன் விதிமுறைகளிலும் ஒருசில ஓட்டைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் வெல்வதற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது, வினேஷ் போகத் உடன் போட்டியிட்ட கியூபா வீராங்கனை இறுதிப்போட்டிக்கு சென்று அமெரிக்க வீராங்கனையுடன் மோதினார். ஏனெனில் வினேஷ் தகுதியிழப்பு ஆகிவிட்டார். அதனால், இது விதிக்கு உட்பட்டு நிகழ்ந்தது. ஆனால், அமெரிக்க வீராங்கனையிடம் தோல்வியை தழுவிய ஜப்பான் வீராங்கனை சுசாகி எந்த அடிப்படையில் வெண்கலத்திற்கான repechage-ல் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்? என்ற கேள்வி எழுகிறது.. ஏனெனில் மல்யுத்த விதிகளில் அதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஆனால், அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை வினேஷ் போகத் தரப்பு எழுப்பலாம்.

அதாவது, அரையிறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இரு வீராங்கனைகள் தான் வெண்கலத்திற்கான போட்டியில் பங்கேற்கின்றன. அப்படியிருக்கையில், ஜப்பான் வீராங்கனைக்கு வெண்கலம் உறுதி செய்யப்பட்டால், அது தாமாகவே வினேஷ் போகத் தான் இறுதிப் போட்டியாளர் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டு கடைசி இடத்திற்கு செல்லும்பட்சத்தில் சுசாகிக்கு வெண்கலம் வழங்கப்பட்டதும் செல்லாதது ஆகிறது. இந்த தகவல்களை சொல்லி வினேஷ் போகத் தரப்பு வாதிடலாம்..

இதையும் படிக்க: மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா இணைந்து பேசிய வீடியோ வைரல்.. திருமணம் செய்ய முடிவா? உண்மை என்ன?

வினேஷ் போகத்
”வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் பெற தகுதியானவர்”- முக்கிய பாய்ண்ட் உடன் சச்சின் கொடுத்த ஆதரவுக்குரல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com