இறுதி 15 வினாடியில் மாறிய போட்டி.. அரையிறுதியில் வினேஷ் போகத்! 4 முறை உலக சாம்பியனுக்கு முதல் தோல்வி

உலக அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் வலம்வந்த ஜப்பானின் யூ சுசாகிக்கு முதல் தோல்வியை பரிசளித்து அரையிறுதிக்கும் தகுதிபெற்றுள்ளார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத். இதன்மூலம் உலக அரங்கில் முதல் தோல்வியை பெறுகிறார் யூ சுசாகி.
vinesh phogat
vinesh phogatX
Published on

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காயம் காரணமாக வெளியேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதியில் தோல்வியுற்று பதக்கம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்த 2 ஒலிம்பிக்கில் சோகமுகத்துடன் வெளியேறிய வினேஷ் போகத்,

  • அறுவைசிகிச்சை காரணமாக 53 கிலோ எடைப்பிரிவில் இருந்து குறைந்து 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றது,

  • முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு போராட்டத்தில் பங்கேற்று தெருக்களில் இழுத்துச்செல்லப்பட்டது,

வினேஷ் போகத்
வினேஷ் போகத்
  • கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திருப்பியளித்து

    போன்ற பல்வேறு இன்னல்களை கடந்து தற்போது இந்தியாவிற்காக ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் இடத்திற்கு தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

vinesh phogat
பெண் வீராங்கனையுடன் மோதியது ஆணா? 46 நொடிகளில் முடிந்த போட்டி.. பாரீஸ் ஒலிம்பிக்கில் எழுந்த சர்ச்சை!

யாராலும் தோற்கடிக்க முடியாத வீராங்கனையை தோற்கடித்த வினேஷ்..

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இதுவரை உலக மேடைகளில் யாராலும் தோற்கடிக்கப்படாத நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டார்.

பரப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதி 30 வினாடிகள் வரை 0-2 என ஜப்பானின் யூ சுசாகியே முன்னிலை பெற்றிருந்தார். எப்படியும் வினேஷ் போகத்தும் இந்த ஒலிம்பிக்கில் வெளியேறிவிடுவார் என்ற எண்ணம்தான் போட்டியை பார்த்த எல்லோருக்கும் தோன்றிருக்கும். ஆனால் கடைசி 15 வினாடிகளில் நடந்தது எல்லாம் ஏதோ கனவுபோலத்தான் இந்திய ரசிகர்கள் எல்லோருக்கும் இருந்தது. எப்படியும் காலிறுதிக்கு முன்னேறிவிட்டோம் என்ற எண்ணத்திலிருந்த யூ சுசாகிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தினார் வினேஷ் போகத். கடைசி 15 வினாடிகளில் 3 புள்ளிகளை சேகரித்து 3-2 என யூ சுசாகியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் யூ சுசாகியை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். யூ சுசாகி நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் 4 முறை உலக சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vinesh phogat
'சின்னபசங்க கூடலாம் எதுக்கு போய் ஆடுறாரு?..' - TNPL ஆடுவது குறித்து உணர்வுபூர்வமாக பேசிய அஸ்வின்!

3 தங்கப்பதக்கம் வென்றவரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி..

காலிறுதிப்போட்டியில் காமன்வெல்த் போட்டிகளில் 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை எதிர்கொண்டு விளையாடினார் வினேஷ் போக்த்.

vinesh phogat
vinesh phogat

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வீழ்த்திய வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். இதுதான் வினேஷ் போகத்தின் முதல் ஒலிம்பிக் அரையிறுதிப் போட்டியாகும், கடந்த 2020 ஒலிம்பிக்கில் காலிறுதியுடன் வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்

வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முன் கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை எதிர்கொள்ளவிருக்கிறார். யூஸ்னிலிஸ் குஸ்மான் பான் அமெரிக்கன் கேம்ஸ் 2023-ல் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்

இருவரும் மோதும் அரையிறுதிப்போட்டியானது இன்று இரவு 10.30 மணிக்கு நடக்கவிருக்கிறது.

vinesh phogat
களத்தில் சீறிப்பாய்ந்த ஈட்டி.. முதல் சுற்றிலேயே நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com