இந்தியர்களுக்கு விழுந்த பேரிடி.. ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த விராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம்!

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வினேஷ் போகத்
வினேஷ் போகத்ஒலிம்பிக்ஸ் 2024
Published on

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு சென்ற வினேஷ் போகத், தேவையான எடையை விட கூடுதலாக 150 கிராம் எடை இருப்பதாக கூறி, “இது போட்டியின் விதிகளை மீறுவதாக கருதப்படுவதால் அவர் இறுதிப்போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளது பாரிஸ் ஒலிம்பிக் குழு.

கடந்த காலங்களில் வினேஷ் போகத் விளையாடும் எடைப்பிரிவு 53 கிலோ. ஆனால், அதற்கு வேறொரு வீராங்கனை தகுதி பெற்றதால், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க முடிவு செய்த வினேஷ், அதற்காக 53 கிலோ எடையில் இருந்த தனது உடல் எடையை, 3 கிலோ குறைத்தார். இதனால், தகுதிச்சுற்றில் கூட அவர் பல இன்னல்களை சந்தித்தார். இதன் பிறகே 50 கிலோ எடைப்பிரிவில் தகுதி பெற்றார்.

இதனையடுத்து, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இதுவரை உலக மேடைகளில் யாராலும் தோற்கடிக்கப்படாத நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டு வரலாற்று வெற்றியை பெற்றார்.

இதனையடுத்து, காலிறுதிப்போட்டியில் காமன்வெல்த் போட்டிகளில் 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை எதிர்கொண்டு விளையாடினார் வினேஷ் போகத். அவரையும் தோற்கடித்து, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அரையிறுதிப்போட்டியில் கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை எதிர்கொண்டார். இவர் அமெரிக்கன் கேம்ஸ் 2023-ல் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரையும் வென்று வெற்றி வாகை சூடினார் வினேஷ் போகத்.

இப்படி முன்னிலையில் இருந்த வீராங்கனைகளை எல்லாம், தனது வலிமையால் தோற்கடித்த வீரப்பெண்மணி, பல கட்ட இன்னல்களுக்கு பிறகுதான் இறுதிப்போட்டிற்கு முன்னேறினார்.

தொடர்ந்து மூன்று போட்டிகளில் பங்கேற்றதால், அவர் எடுத்துக்கொண்ட ஊட்டசத்துக்கள் காரணமாக, நேற்று இரவு முதலே தோராயமாக 2 கிலோ எடை அதிகரித்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே, இரவு முழுவதும் தூங்காமல், ஜாகிங், ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல் என அனைத்து பயிற்சிகளையும் செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பது எடையை சோதனை செய்தபோது, தேவையான எடையை விட 150 கிராம் எடையை அதிகமாக இருந்துள்ளார். அதாவது 50 கிலோ 150 கிராம் இருந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்

இருப்பினும், எடையை குறைக்க அவருக்கு வாய்ப்பளிக்குமாறு இந்தியத் தூதுக்குழு ஒலிம்பிக் சங்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வாய்ப்பு அளிக்கப்படாத சூழலில், தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினேஷ் போகத்.

கடந்த 24 மாதங்களாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல இன்னல்களை சந்தித்த வினேஷ், தற்போது இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் இடியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், நீங்கள் மக்களின் மனங்களை எப்பொழுதோ வென்றுவிட்டீர்கள் வினேஷ் போகத்!!!!

வினேஷ் போகத்
‘போராடியே... நீ வெல்லடா!’ வலிகளுடன் யுத்தம் நடத்தி இறுதிச்சுற்றுக்கு சென்ற சாதனை மங்கை வினேஷ் போகத்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com