‘போராடியே... நீ வெல்லடா!’ வலிகளுடன் யுத்தம் நடத்தி இறுதிச்சுற்றுக்கு சென்ற சாதனை மங்கை வினேஷ் போகத்!

ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் மல்யுத்தப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார், வினேஷ் போகத். இந்தியாவின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள வினேஷ் போகத், பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வரை சென்ற பாதையை இங்கே அறியலாம்!
வினேஷ் போகத்
வினேஷ் போகத்முகநூல்
Published on

செய்தியாளர்: சந்தானகுமார்.

2023-ம் ஆண்டு டெல்லி ஜந்தர்மந்தரில் காவல்துறையினர் சுற்றிச்சூழ நின்ற நிலையில், தேசியக்கொடியை கீழே விழாமல் கையில் பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர் வினேஷ் போகத்.

  • மூன்று முறை ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை,

  • ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை,

  • மல்யுத்தம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் 3 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை

... இப்படி இன்னும் பல பெருமைகள் இருந்தும், கடந்த ஓராண்டு காலம் இவருக்கு கடும் சவாலாகவே இருந்தது.

2023 ஜனவரி 18 டெல்லி ஜந்தர் மந்தரில் அப்போது மல்யுத்த சங்கத்தின் தலைவராக இருந்த அப்போதைய பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை எதிர்த்து மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் மேற்கொண்டனர். மத்திய அரசு சார்பில் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டனர். பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் ஏப்ரல் மாதம் போராட்டம் செய்த மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

வினேஷ் போகத்
இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்.. இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்

அப்போதுதான் வினேஷ் தன்னுடைய சகோதரியுடன் தரையில் படுத்தபடி காவல்துறைக்கு நடுவே தேசிய கொடி தரையில் விழாமல் கண்ணீருடன் தாங்கி பிடித்த புகைப்படம் வெளியானது. மே மாதம் ஹரித்வாரில் கங்கை நதியில் பதக்கங்களை போடும் நேரத்தில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியதால் பதக்கங்களை கங்கையில் விடாமல் வினேஷ் போகத் உள்ளிட்டோர் மீண்டும் போராட்ட களம் புகுந்தனர்.

இவர்களின் 40 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு பின் ஜூன் மாதம் Brij Bhushan Sharan Singh மீது FIR பதிவு செய்யப்பட்டது. போராட்டம் முடிந்து களத்திற்கு திரும்ப வினேஷ் போகத் தயாராகி நேரத்தில் அவருக்கு கால்முட்டியில் மீண்டும் காயம் ஏற்பட்டது. ரியோ ஒலிம்பிக் தொடருக்கு பின் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவர் மீண்டும் எப்படி விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் அதில் இருந்து மீண்டு வந்த வினேஷ் 50 மற்றும் 53 கிலோ எடை பிரிவில் விளையாட முடிவு செய்தார். அவருக்கு சாதகமாக 53 கிலோ எடை பிரிவில் antim phangal பாரிஸ் ஒலிம்பிக் QUOTA வை பெற்று இருந்ததால் தன்னை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப விடாமல் செய்வார்கள் என்ற அச்சத்தில் இரண்டு பிரிவுக்கும் தயாரானார் வினேஷ்.

2024 ஏப்ரல் மாதம் ஆசிய ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியின் மூலம் ஒலிம்பிக் QUOTA வை பெற்றார். இப்படி போராட்டம், கண்ணீர், மிரட்டல் என பல்வேறு தடைகளை கடந்து சர்வதேச போட்டியான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வந்த வினேஷ் போகத்திற்கு முதல் சுற்றே சவாலானதாக இருந்தது. 4 முறை ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியன் ,சர்வதேச போட்டிகளில் 82 முறை விளையாடி ஒரு முறை கூட தோல்வியை சந்திக்காத ஜப்பான் வீராங்கனை Yui Sasaki ஐ எதிர்த்து விளையாடினார். இதுவரை தோல்வியே சந்திக்காத Yui Sasaki ஐ இறுதி வினாடியில் வீழ்த்தி மீண்டும் வரலாற்றை உருவாக்கி காலிறுதிக்கு முன்னேறினார் வினேஷ்.

காலிறுதிப்போட்டியில், உக்ரைன் நாட்டு வீராங்கனை LIVACH- யை எதிர்கொண்ட வினேஷ் 7க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய வினேஷ் போகத், அரையிறுதியில் கியூபாவின் கஸ்மான் லோபசை 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஓராண்டுகால மனஉளைச்சல், போராட்டங்களால் எழுந்த நெருக்கடி ஆகியவற்றை கடந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகத் வீழ்த்தியது எதிர் வீராங்கனைகளை மட்டுமல்ல... அவருக்கு எதிரான கட்டமைப்புகளையும்தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com