போராட்டம், கண்ணீர், மிரட்டல் என பல்வேறு தடைகளை கடந்து சர்வதேச போட்டியான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வந்த வினேஷ் போகத்திற்கு முதல் சுற்றே சவாலானதாக இருந்தது. காரணம், 4 முறை ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியன் , சர்வதேச போட்டிகளில் 82 முறை விளையாடி ஒரு முறை கூட தோல்வியை சந்திக்காத ஜப்பான் வீராங்கனை Yui Sasaki ஐ எதிர்த்து விளையாடினார். இதுவரை தோல்வியே சந்திக்காத Yui Sasaki ஐ இறுதி வினாடியில் வீழ்த்தி மீண்டும் வரலாற்றை உருவாக்கி காலிறுதிக்கு முன்னேறினார் வினேஷ். காலிறுதிப்போட்டியில், உக்ரைன் நாட்டு வீராங்கனை LIVACH- யை எதிர்கொண்ட வினேஷ் 7க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இன்று நடந்த 50கிலோ எடைப்பிரிவு அரையிறுதிப் போட்டியில் கியூபாவின் குஸ்மானை வீழ்த்தி, வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.