“வினேஷ் போகத் தகுதிநீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை” - சர்வதேச மல்யுத்த சங்கம் திட்டவட்டம்

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என சர்வதேச மல்யுத்த சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வினேஷ் போகத்
வினேஷ் போகத்pt web
Published on

50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, இந்தியர்களின் இதயங்களை நொறுங்கச் செய்திருக்கிறது.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்ஒலிம்பிக்ஸ் 2024

நேற்று நடைபெற்ற சோதனையில் சரியான எடையில் இருந்த நிலையில், இன்று நடைபெற்ற சோதனையில் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கியூபாவின் குஸ்மான் லோபஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையுடன் மோத இருந்தார்.

PTUsha
VineshPhogat
PTUsha VineshPhogat

வினேஷ் போகத்திற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஆராய, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷாவிடம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருக்கிறார் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் மக்களவையில் தெரிவித்திருந்தார்.

வினேஷ் போகத்
வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என சர்வதேச மல்யுத்த சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தியா சார்பில் பிடி உஷா போன்றோர் வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக மேல்முறையீடு செய்திருந்தார்கள். இத்தகைய சூழலில்தான், சர்வதேச மல்யுத்த சங்கத்தின் தலைவர், வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது என்றும், அதில் எவ்வித மாற்றமும் செய்வதற்கான தேவையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத், குஸ்மான் லோபஸ்
வினேஷ் போகத், குஸ்மான் லோபஸ்pt web

100 கிராம் மட்டும்தான் அதிகம் என்பதற்காக வினேஷ் போகத்தை அனுமதிக்க முடியாது எனவும் சர்வதேச மல்யுத்த சங்கம் தெரிவித்துள்ளது. வினேஷ் போகத்திற்கு ஏற்பட்ட இந்த நிகழ்விற்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவிப்பதாகவும், ஆனால், வினேஷ் போகத்தை மீண்டும் அனுமதிப்பதற்கான வழி என்பது மல்யுத்த விதிமுறைகளின்படி இல்லை என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத்
வினேஷ் போகத் தகுதியிழப்பு.. இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையுடன் மோதப்போவது யார்?

100 கிராம் அதிகமாக இருக்கும் வினேஷ் போகத்தை இன்று விளையாட அனுமதிக்கும் பட்சத்தில், நாளை 200 கிராம் அதிகமுள்ள நபர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என கூறுவார்கள். ஏற்கனவே மல்யுத்த சங்கத்தின் விதிமுறைகள் தெளிவாக இருப்பதன் காரணமாக அதில் எந்த மாற்றத்தையும் கொண்டுவருவதற்கான தேவை இல்லை.

வினேஷ் போகத் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை, தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் எவ்வித மாற்றமும் இல்லை. மாற்றம் செய்வதற்கும் சர்வதேச மல்யுத்த சங்கம் தயாராக இல்லை என்று சர்வதேச மல்யுத்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத்
வயநாடு நிலச்சரிவு | மலை உச்சியில் உணவே இல்லாமல் உயிருக்கு போராடிய நாய்.. 7 நாட்களுக்கு பிறகு மீட்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com