”முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” - 58 வயதில் ஒலிம்பிக் மேடை! கனவை நனவாக்கிய சீன வீராங்கனை!

டேபிள் டென்னிஸ் வீரர் Zeng Zhiying, ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்ற தனது கனவை, தன் 58 வயதில் நனவாக்கியுள்ளது கேட்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 Zeng Zhiying
Zeng Zhiyingமுகநூல்
Published on

டேபிள் டென்னிஸ் வீரர் Zeng Zhiying, ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்ற தனது கனவை, தன் 58 வயதில் நனவாக்கியுள்ளது கேட்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Zeng Zhiying தெற்கு சீன நகரமான குவாங்சோவில் பிறந்தவர். சிறிய வயதிலிருந்தே தனது தாய் அளித்த பயிற்சியின் மூலம், இளம் வயதிலேயே டென்னிஸில் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார்.

தனது 16 வயதில் சீனாவின் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். டென்னிஸில் தொடர் பயிற்சியையும் ஈடுபாட்டையும் கொண்டு, பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றாலும், 1988 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டில் கலந்து கொள்ளும் முன்பு இவர் தோல்வியை தழுவினார். இதனால், இவர் கொண்ட விரக்தி காரணமாக, டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து விலகிக்கொண்டார்.

இதன் பிறகு 1986 ஆம் ஆண்டு முதல் தனது வாழ்க்கையை ஒரு டென்னிஸ் பயிற்சியாளராக தொடர்ந்தார். இதனால், சீனாவைவிட்டு வெளியேறி, வடக்கு சிலிக்கு குடியேறினார். அங்கிருக்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு டேபிள் டென்னில் கற்றுகொடுக்க ஆரம்பித்தார்.

மற்றொரு புறம் டேபிள் டென்னிஸிலிருந்து விலகி விடலாம் என்ற நோக்கத்தில், வணிகத்தில் இறங்க முடிவு செய்தார். கோவிட் தொற்று ஏற்படும் வரை டேபிள் டென்னிஸ் குறித்தான இவரது பாதை பின்னோக்கியே இருந்தது. இதன்பிறகுதான், மீண்டும் டென்னிஸில் விளையாட வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

 Zeng Zhiying
சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார் போபண்ணா... ஒலிம்பிக்ஸில் 1996க்கு பின் தொடரும் சோகம்!

இதனால், ஒலிம்பிக்கில் விளையாட தேர்ச்சி பெறும் வரை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து விளையாட ஆரம்பிக்கிறார். குவாலிஃபையர் சுற்றுக்கு தகுதி பெறும் வரை தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுகிறார். இறுதியாக, ஒலிம்பிக்கில் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த வகையில், தனது பல நாள் கனவான, பாரிஸில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். இதில், இவர் தோல்வியை தழுவினாலும், பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இவர் ஒலிம்பிக் மேடையில் தடம் பதித்திருப்பது, இவரின் 92 வயது தந்தைக்கும்,இவருக்கும் மறக்கமுடியாத ஒரு தருணம்.. இதன்மூலம் ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என நினைத்த தன் தந்தையின் கனவையும் நிறைவேற்றி அசத்தியுள்ளார் இவர்.

இதனையடுத்து, இவர் தெரிவிக்கையில், (அடுத்த ஒலிம்பிக் போட்டியின் போது, Zeng தனக்கு 62 வயதாகும் என்று கூறுகையில்,) “அப்போது, எனக்கு விளையாடுவதற்கு சிறிது கடினமாக இருந்தாலும், எனது உடல் வேண்டாம் என்று சொல்லும் வரை நான் தொடர்ந்து விளையாடி கொண்டுதான் இருப்பேன்.” என்று தெரிவித்தார்.

மேலும், ஒலிம்பிக் பயிற்சி மையத்தில் இவர் இது குறித்து தெரிவிக்கையில், “நான் ஒலிம்பிக்கில் விளையாடுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. நான் இதை ஒரு பொழுதுபோக்காகத்தான் பார்த்தேன். நான் மீண்டும் மீண்டும் விளையாடியதன் மூலம் , எனக்கு அதற்கான தன்னம்பிக்கை கிடைத்தது. வெற்றிப்பெற்றதால் மீண்டும் மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வந்தது.

ஒலிம்பிக்கில் தகுதி பெற வேண்டும் என்பது எனது மிகப்பெரிய பிரம்மாண்ட கனவு, அதை இந்த வயதில் நிறைவேற்றும்போது எனக்கு அது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. ” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

பாரீஸ் மகளிர் ஒலிம்பிக் பிரிவில் ஜெங் மட்டும் வயதான வீராங்கனை கிடையாது . இந்த விளையாட்டில் பட்டத்தையே தட்டி சென்றது 61 வயதான ni xialian என்பவர்தான் என்பது ஸ்வாரஸ்யமான தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com