Paralympics 2024 |வில்வித்தையில் ஒரு புள்ளியில் உலக சாதனையை தவற விட்ட ஷித்தல் தேவி!

பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவின் வில்வித்தை வீராங்கனை ஷித்தல் தேவி ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டார்.

பாராலிம்பிக் வில்வித்தை போட்டியின் தரவரிசை சுற்றில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி, 703 புள்ளிகளை பெற்றார். இதன்மூலம் பாரா விளையாட்டுகளின் சாதனை மற்றும் உலக சாதனையை அவர் முறியடித்தார். ஆனால், தகுதிச் சுற்றில் பங்கேற்ற துருக்கி வீராங்கனை ஓஸ்னூர் க்யூர் 704 புள்ளிகளை பெற்று புதிய சாதனை படைத்தார்.

sheetal devi
sheetal devi

இதன்மூலம் ஒரு புள்ளியில் ஷீத்தல் தேவி உலக சாதனையை தவறவிட்டார். எனினும் ஷீத்தல் தேவி 2ஆவது இடம்பிடித்து நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். அவருடன் களமிறங்கிய சரிதா முதல் சுற்றில் விளையாடவுள்ளார்.

மற்றவீரர்கள் நிலை என்ன?

  • பேட்மிண்டன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நிதேஷ்குமார், துளசிமதி முருகேசன் இணை வெற்றி பெற்றது.

  • மற்றொரு போட்டியில் சிவராஜன் சோலைமலை- நித்யஸ்ரீ ஜோடி தோல்வி அடைந்தது.

  • மகளிர் ஒற்றையர் எஸ்.எல்.4 பிரிவில் பாலக் கோலி, எஸ்.யு.5 பிரிவில் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் ஆகியோரும் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

  • ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.4 பிரிவில் இந்தியாவின் சுகந்த் கடம், தருண் ஆகியோரும், எஸ்.எல்.3 பிரிவில் நிதேஷ்குமாரும் வெற்றி பெற்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com