ஒலிம்பிக் தங்கம் வென்றவருக்கு ஜாக்பாட்: LifeTime இலவச சாப்பாடுடன் ரூ 4.5 கோடி மதிப்பிலான வீடு பரிசு!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கார்லோஸ் யூலோவுக்கு அந்நாட்டு அரசு ரூ.4.5 கோடி மதிப்புடைய சொகுசு வீட்டை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது. யூலோ பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் ஒலிம்பிக் தக்கத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Carlos Yulo
Carlos Yulo x
Published on

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பிலிப்பைன்ஸின் அக்ரோனிஸ் கார்லோஸ் யூலோ, பிலிப்பைன்ஸ் நாட்டிற்காக முதல் தங்கப்பதக்கத்தை வென்றது மட்டுமில்லாமல், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்தார்.

ஆண்களுக்கான தளம் மற்றும் வால்ட் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு போட்டி இரண்டிலும் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்ற யூலோ, பிலிப்பைன்ஸ் நாட்டிற்காக தங்கம் வெல்லும் முதல் வீரர் மற்றும் பதக்கம் வெல்லும் இரண்டாவது வீரர் என்ற இமாலய சாதனையை பெற்றார்.

Carlos Yulo
Carlos Yulo

இதையடுத்து, இந்திய ரூபாயில் 4.5 கோடி மதிப்பிலான ஆடம்பரமான 3-BHK முழு வசதியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பைப் பரிசாக பெற்றுள்ளார் யூலோ. “பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்து, ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு சிறப்பு வெகுமதி கிடைக்குமென எனக்குத் தெரியும். இருப்பினும் இது எதிர்பாரா பரிசே” என யூலோ நெகிழ்ந்திருக்கிறார்.

Carlos Yulo
அமீர் கானுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்..? பான் இந்தியா படமாக உருவாக்க திட்டம்! வெளியான மாஸ் அப்டேட்!

4.5 கோடி மதிப்பிலான வீடு பரிசு!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களை பிலிப்பின்ஸ் அரசு பரிசுத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

அந்தவகையில் இரண்டு தங்கங்களை வென்று தங்கமகனாக நாடு திரும்பிய கர்லோஸ் யூலோவுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகையும், 32 மில்லியன் பிலிப்பைன்ஸ் பெசோஸ் மதிப்புடைய சொகுசு வீட்டையும் பரிசாக வழங்கியுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.4.5 கோடி.

வீடு மட்டுமின்றி வீட்டிற்குத் தேவையான மேசைகள், மின்னணு இயந்திரங்கள் என அனைத்துப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டியை நினைவுபடுத்தும் வகையில் மேஜைகள் தங்கப் பதக்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. தனக்கு பரிசாக வழங்கப்பட்ட வீட்டின் உள்புற புகைப்படங்களை யூலோ தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வாழ்நாள் முழுவதும் இலவச சாப்பாடு:

கார்லோஸ் யூலோ தங்கம் வென்றதற்காக பிலிப்பைன்ஸில் உள்ள உணவு நிறுவனம் ஒன்று, தனது உணவகத்தில் யூலோவின் வாழ்நாள் முழுவதுக்குமான உணவுக் கட்டணம் (ஜப்பான் உணவு) இலவசம் என அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மற்றொரு உணவு நிறுவனம் வாழ்நாள் முழுவதும் அவருக்கும், அவருடைய காதலிக்கும் குக்கீஸ்களையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

வழங்கப்பட்ட மொத்த சலுகைகள்:

* 32 மில்லியன் பிலிப்பைன்ஸ் பெசோஸ் மதிப்புடைய சொகுசு வீடு.

* பிலிப்பைன்ஸ் விளையாட்டு ஆணையத்திடமிருந்து 10 மில்லியன் ரொக்கம்.

* நாட்டின் பிரதிநிதிகள் சபையிலிருந்து 3 மில்லியன் ரொக்கம்.

* வாழ்நாள் முழுவதும் இலவச கொலோனோஸ்கோபிகள் மற்றும் காஸ்ட்ரோஎன்டாலஜி மருத்துவ செக்கப், அவருடைய 40 வயதுவரை இதுகிடைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது, தற்போது யூலோவுக்கு 24 வயது.

* 1,00,000 பிலிப்பைன்ஸ் பெசோஸ் மதிப்புள்ள இலவச மரச்சாமான்கள்.

* வாழ்நாள் முழுவதும் இலவச உணவு, குக்கீஸ்.

* ஐபோன் 16.

* நெக்ஸா இன்ஜினியரிங் மூலம் வாழ்நாள் முழுவதும் சிறப்பு டிஸ்கண்ட்.

Carlos Yulo
“உங்கள் மகனுக்கும்,சகோதரனுக்கும் கற்றுக்கொடுங்க”-பெண்களுக்கு எதிரான குற்றத்திற்காக SKY சாட்டை பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com