செய்தியாளர் - சந்தானகுமார்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரின் 5வது நாளான இன்று நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.
ஆண்களுக்கான 50 மீட்டர் 3P துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே இறுதி சுற்றுக்கு முன்னேறினார், 3 விதமான கோணங்களில் ( KNEELING,PRONE,STANDING ) சுடும் இந்தப் போட்டியில் 590 புள்ளிகள் பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 589 புள்ளிகள் பெற்ற மற்றொரு இந்திய வீரர் AISWARY PRATHAP SINGH THOMAR தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜொனாதன் கிறிஸ்டியை 21-18,21-12 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிருக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, எஸ்டோனியா நாட்டின் கிறிஸ்டின் KUUBAVAI 21-5, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா, சிங்கப்பூர் வீராங்கனை என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த ஒலிம்பிக்ஸ் தொடர் தொடங்கும் வரை டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் தனி வீரர்கள் பிரிவில் யாருமே 3வது சுற்றுக்கு முன்னேறாமல் இருந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மணிகா பாட்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளனர்.
75 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், நார்வே நாட்டை சார்ந்த HOFSTAD ஐ 5-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கடந்த ஒலிம்பிக்ஸ் தொடரில் வெண்கலம் வென்ற லவ்லினா போர்கோஹைன் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் மீண்டும் ஒரு பதக்கத்தை அவர் வெல்வார் . மகளிர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நெதர்லாந்து வீராங்கனை QUINTY ROEFFEN ஐ 6-2 என வீழ்த்தி காலிறுதி முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறினார்.