உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் 33வது ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் 32 விதமான போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரும் இடம் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இரண்டு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதால், ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்து, உக்ரைன் போருக்கு உதவும் பெலாரஸ் நாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக்கிலும் இந்த இருநாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக் தொடங்குவதற்கு, ஒருவாரத்திற்கு முன்பு அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷ்யா தொடங்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், அதனை ரஷ்யா ஏற்கவில்லை. இதன்காரணமாக, ரஷ்யாவை புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதே காரணத்துக்காக பெலாரஸ் நாட்டையும் தடை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளையில், ரஷ்யா மற்றும் பெலாரஸைச் சேர்ந்தவர்கள் சற்று தனிப்பட்ட நடுநிலை விளையாட்டு வீரர்கள் என்ற முறையில், அதாவது AIN (Athlete Individuel Neutre) என்கிற வகையில் போட்டியிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. AIN என்பது பிரெஞ்சு சொற்றொடரான Athlete Individuel Neutre. அதாவது, ஆங்கிலத்தில் Individual Neutral Athlete என்று பொருள்படும். இந்த முறையில், ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வகை செய்கிறது.
அவர்கள் உக்ரைன் போருக்கு ஆதரவை வெளிப்படுத்தாதவரை அல்லது ரஷ்ய தேசிய பாதுகாப்பு நிறுவனங்களில் பணியை மேற்கொள்ளாதவரை விளையாட்டு வீரர்கள் நடுநிலைக்கொடியின்கீழ் போட்டியிட தகுதி பெற்றவர்களாகிறார்கள். அந்த வகையில், அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்றால், அவர்களின் நாட்டு தேசிய கீதத்திற்குப் பதிலாக நடுநிலை தடகளப் பாடல் இசைக்கப்படும். இருப்பினும், அனைத்து ரஷ்ய மற்றும் பெலாரஷிய விளையாட்டு வீரர்களும் இந்த வழியில் போட்டியிடத் தகுதி பெறமாட்டார்கள்.
ஆனால், அதில் சில வீரர்கள் இந்த முறையை ஏற்றுக் கொண்டதாகவும், சிலர் நிராகரித்ததாகவும் ஆங்கில ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 32 விளையாட்டு வீரர்கள் தனிப்பட்ட நடுநிலை விளையாட்டு வீரர்களாக போட்டியிட தங்கள் அழைப்பை ஏற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யா: 3 சைக்கிள் வீரர்கள்
தமரா ட்ரோனோவா
அலெனா இவான்சென்கோ
க்ளெப் சிரிட்சா
பெலாரஸ்: 1 சைக்கிள் வீரர்
ஹன்னா செராக்
ரஷ்யா: 1 டிராம்போலைன் தடகள வீரர்
Anzhela Bladtceva
பெலாரஸ்: 2 டிராம்போலைன் விளையாட்டு வீரர்கள்
இவான் லிட்வினோவிச்
வியாலேதா பார்ட்ஜிலோஸ்கயா
பெலாரஸ்: 1 டேகுவான்டோ தடகள வீரர்
ஜார்ஜி குர்ட்ஸீவ்
பெலாரஸ்: 2 பளுதூக்கும் வீரர்கள்
சியுசானா வலோட்ஸ்கா
Yauheni Tshikhantsou
பெலாரஸ்: 2 மல்யுத்த வீரர்கள்
அபூபக்கர் கஸ்லகானௌ
மஹாமேத்காபிப் கட்ஸிமஹமேதௌ
பெலாரஸ்: 2 படகோட்டும் வீரர்கள்
Yauheni Zalaty
டாட்சியானா கிளிமோவிச்
பெலாரஸ்: 2 துப்பாக்கி சுடும் வீரர்கள்
தர்யா சுப்ரிஸ்
அலியாக்சாண்ட்ரா பியாட்ரோவா
ரஷ்யா: 7 டென்னிஸ் வீரர்கள்
டேனியல் மெட்வெடேவ்
ரோமன் சஃபியுலின்
எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா
மிர்ரா ஆண்ட்ரீவா
பாவெல் கோடோவ்
டயானா ஷ்னைடர்
எலெனா வெஸ்னினா
ரஷ்யா: 3 கேனோ வீரர்கள்
அலெக்ஸி கொரோவாஷ்கோவ்
ஜாகர் பெட்ரோவ்
ஒலேசியா ரோமசென்கோ
பெலாரஸ்: 2 கேனோ வீரர்கள்
Uladzislau கிராவெட்ஸ்
யூலியா ட்ருஷ்கினா
ரஷ்யா: 1 நீச்சல் வீரர்
எவ்ஜெனி சோமோவ்
பெலாரஸ்: 3 நீச்சல் வீரர்கள்
அலினா ஸ்முஷ்கா
இலியா ஷைமனோவிச்
அனஸ்தேசியா ஷ்குர்தாய்
மேலும் 28 விளையாட்டு வீரர்களுக்கு தனிப்பட்ட நடுநிலை விளையாட்டு வீரர்களாக போட்டியிட அழைப்புகள் வழங்கப்பட்டபோதும், அவர்கள் அந்தச் சலுகையை நிராகரித்துள்ளனர்.
ரஷ்யா: 1 சைக்கிள் ஓட்டும் வீரர்
அலெக்சாண்டர் விளாசோவ்
ரஷ்யா: 10 மல்யுத்த வீரர்கள்
நாச்சின் மோங்குஷ்
ஷமில் மாமெடோவ்
அர்ஸ்லான் பாகேவ்
அப்துல்லா குர்பனோவ்
ஆலன் ஓஸ்டாவ்
மாகோமட் முர்தாசலீவ்
நடால்யா மலிஷேவா
வெரோனிகா சுமிகோவா
அலினா கசபீவா
எலிசவெட்டா பெட்லியாகோவா
பெலாரஸ்: 5 மல்யுத்த வீரர்கள்
யாஹோர் அகுலிச்
Uladzislau Kazlou
Dzmitri Zarubski
வியாலேதா ரெபிகாவா
கிறிஸ்டினா சசிகினா
ரஷ்யா: 6 டென்னிஸ் வீரர்கள்
ஆண்ட்ரி ரூப்லெவ்
கரேன் கச்சனோவ்
டாரியா கசட்கினா
லியுட்மிலா சாம்சோனோவா
அன்னா கலின்ஸ்காயா
அனஸ்தேசியா பொட்டாபோவா
பெலாரஸ்: 2 டென்னிஸ் வீரர்கள்
அரினா சபலெங்கா
விக்டோரியா அசரென்கா
ரஷ்யா: 4 ஜூடோ வீரர்கள்
வலேரி எண்டோவிட்ஸ்கி
எலிஸ் ஸ்டார்ட்சேவா
டாலி லிலுவாஷ்விலி
Makhmadbek Makhmadbekov