“He's a Darling” – நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர்!

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்த மனு பாக்கர்-க்கு வேலம்மாள் பள்ளி குழுமம் சார்பில் முகப்பேரில் பாராட்டு விழா நடைபெற்றது.
மனு பாக்கர்
மனு பாக்கர்புதிய தலைமுறை
Published on

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்த மனு பாக்கர்-க்கு வேலம்மாள் பள்ளி குழுமம் சார்பில் முகப்பேரில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மனு பாக்கர் பேசியபோது... “கடுமையான உழைப்பு இருந்தால் பெரிதாக சாதிக்கலாம், பெரிய கனவு காண்பது மூலம் பெரிய இலக்கை அடையலாம். தோல்வியிலும் தளராமல் இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை பள்ளி காலத்தில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தொடங்கினேன். முதலில் வீட்டிலும் அடுத்து பள்ளியிலும் நமக்கு ஆதரவு கிடைக்க வேண்டும், அது எனக்கு கிடைத்தது.

மனு பாக்கர்
மனு பாக்கர்pt web

இங்கே படித்தவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பு உள்ளது. டாக்டர், இன்ஜினியர் மட்டுமே படிப்பு அல்ல, அதை தாண்டி நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக விளையாட்டுத்துறையிலும் வேலை வாய்ப்பு உள்ளது. உலகம் சுற்ற ஆசை படுபபவர்கள் விளையாட்டு துறையயை தேர்வு செய்யுங்கள். நானெல்லாம் பாதி உலகத்தை சுற்றி விட்டேன்.

மனு பாக்கர்
ஒரே ஓவரில் 39 ரன்கள்! 17 ஆண்டுகால யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு.. ருத்ரதாண்டவம் ஆடிய சமோயா அணி வீரர்!

எப்போதுமே நமது பின்புலம் பற்றி அவமானப்பட வேண்டாம். நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதெல்லாம் முக்கியமல்ல. எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது, பல விஷயங்கள் தெரியாமல்தான் இருந்தேன், பிறகு கற்றுக் கொண்டேன். கற்றுக் கொடுத்தார்கள்.

மனு பாக்கர்
மனு பாக்கர்pt web

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட போது, மிகவும் பதட்டமடைந்தேன், சுய நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். அதை புறந்தள்ளி வெற்றி பெற வேண்டியிருந்தது, தோல்விகள் பல அடைந்தால்தான் என்னால் இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் வெற்றியடைய முடிந்தது” என்று பேசினார்.

மனு பாக்கர்
‘KKR இல்லை என்றால் எந்த அணிக்கு செல்வீர்கள்?’ - Rinku சொன்ன சர்ப்ரைஸ் பதில்!

மேலும் உங்களுக்கு பிடித்த தென்னிந்திய உணவு எது என்ற கேள்விக்கு, “எனக்கு பொங்கல் மிகவும் பிடிக்கும், எனது வீட்டில் எனது அம்மா சமைக்கும் தோசை மிகவும் பிடிக்கும்” என பேசினார்.

தொடர்ந்து, ‘தமிழக முதல்வர் ஸ்டாலினை தெரியுமா?’ என்ற கேள்விக்கு, ‘தெரியாது’ என்று பதில் அளித்த மனு பாக்கர் பிரக்ஞானந்தாவை தெரியுமா என்ற கேள்விக்கு, நன்றாக தெரியும் என்றும், நடிகர் விஜய் தெரியுமா என்ற கேள்விக்கு, “Yes... He's a Darling” எனவும் பதில் அளித்தார்.

‘ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் மற்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கி இருப்பது குறித்து உங்களின் கருத்து என்ன?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஆம் பல நாடுகள் நம்மை விட முன்னிலை வகிக்கின்றன. நாம் அனைவரும் பதக்கப் பட்டியலை உயர்த்தும் நம்பிக்கையுடன் இருப்போம். மற்ற நாடுகளிடம் ஒன்று உள்ளது. என்னவெனில், அவர்கள் குழந்தைகளை இளவயதிலேயே விளையாட்டு துறையில் முன்னோக்கி செல்ல செய்கிறார்கள். நம் நாட்டிலும் அந்த வகையான திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும், அதுவே சிறந்ததாக இருக்கும்” என பேசினார்.

பாரிஸ் ஒலிம்பிக்
பாரிஸ் ஒலிம்பிக் Facebook

தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசிய மனு பாக்கர், “பெண்கள் நம் நாட்டின் 50 சதவீத மக்கள் தொகையை உருவாக்குகிறார்கள். அப்படியான பெண்களுக்காக சமூகத்தை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயல் பட வேண்டும். ஒவ்வொரு நபரின் கடமையாக இது இருப்பது அவசியம். நாம் அனைவரும் இணைந்து சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். நாம் முன்னேற்ற பாதையில் உள்ளோம்” என பதில் அளித்தார்.

மேலும் வினேஷ் குறித்து பேசிய மனு பாக்கர், “அவர் எனக்கு அக்கா போன்ற மரியாதையானவர், அவரிடம் எனக்கு நல்ல மரியாதை உள்ளது, என்னை விடவும் வயதில் பெரியவர். நான் அவரை எப்போதும் போராளியாகவே பார்த்திருக்கிறேன். அவர் எல்லா சிரமங்களையும் சமாளிக்க தகுதியானவர். அவர் மீள்வதையும் நான் பார்த்துள்ளேன். அவர் இனியும் தொடர்ந்து முன்னேறுவார்” என பேசினார்.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்ஒலிம்பிக்ஸ் 2024

இறுதியாக அவரின் அடுத்த கட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் தற்போது ஓய்வெடுக்க விரும்புகிறேன், எனது தோளில் சுமையை குறைத்து, மூன்று மாதங்களுக்கு ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளேன். 4 அல்லது 5 மாதங்கள் கழித்து மீண்டும் எனது பணியை துவங்குவேன்” என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com