பாலின சர்ச்சை|’பெண்ணாகவே பிறந்தேன், பெண்ணாகவே வளர்ந்தேன்’ - தங்கப்பதக்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை!

பாலினம் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத அல்ஜீரியா வீராங்கனை இமான் கெலிஃப் தற்போது ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றபின்பு, அதுகுறித்து மெளனம் கலைத்துள்ளார்.
இமானே கெஃலிப்
இமானே கெஃலிப்எக்ஸ் தளம்
Published on

பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் சீனா வீராங்கனை யாங் லியூவை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே கெலிஃப் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். முன்னதாக, 2வது சுற்றில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, இமானே கெலிப்பின் குத்துகளை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 வினாடிகளில் அழுதபடி போட்டியில் இருந்து விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இமான் கலீஃப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பதிவிடப்பட்டன. ஆனால் தன் பாலினம் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத இமான் தற்போது அது தொடர்பாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர், "கடந்த 8 ஆண்டுகளாக ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வது மட்டுமே எனது கனவாக இருந்தது. இப்போது நானும் ஒலிம்பிக் சாம்பியன். தங்கப் பதக்கம் வென்றுள்ளேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாம் அனைவரும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதே விளையாட்டு வீரர்களாக திறமையை வெளிப்படுத்துவதற்குத்தான். மீண்டும் இதுபோன்ற தாக்குதல்கள் யாருக்கும் நடக்காமல் இருக்க வேண்டும். இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க நான் முறையாக தகுதிபெற்றுள்ளேன்.

மற்ற பெண்களைப்போல் நானும் ஒரு பெண்தான். ஒரு பெண்ணாகவே பிறந்தேன்; பெண்ணாகவே வளர்ந்தேன்; பெண்ணாகதான் பதக்கம் வென்றுள்ளேன். என்னை எதிரியாக நினைக்கும் சிலரால் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. இந்த வெற்றிக்காக 8 ஆண்டுகளாக கடினமாக உழைத்துள்ளேன். 8 ஆண்டுகளாக தூக்கம் இழந்து பயிற்சி செய்திருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ஒரேநாளில் 15 கின்னஸ் சாதனைகள்.. அமெரிக்க ’சீரியல் ரெக்கார்டு பிரேக்கர்’ அசத்தல்!

இமானே கெஃலிப்
ஒலிம்பிக் கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்தாரா அன்டிம் பங்காலின் சகோதரி? உண்மையில் நடந்தது என்ன?

முன்னதாக இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையான நிலையில், இமானே கெலிஃபின் தந்தை ஒமர் கெலிஃப், "என் குழந்தை ஒரு பெண். அவள் ஒரு பெண்ணாகவே வளர்க்கப்பட்டாள். அவள் ஒரு வலிமையான பெண்.

நான் அவளை திறமையுடனும் தைரியத்துடனும் வளர்த்தேன். அவளுக்கு போட்டியில் வெல்வதற்கு வலுவான விருப்பம் உள்ளது” என தன் மகளுக்கு ஆதரவாகவும் தன் மகளின் இனம் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:

இமானே கெஃலிப்
OLYMPIC குத்துச்சண்டை சர்ச்சை|மகளின் பாலினம் குறித்து எமோஷனலாக பேசிய தந்தை! மன்னிப்புகேட்ட வீராங்கனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com