“குட்டி தேவதையுடன் மோதினேன்..” - தோல்விக்குபிறகு கண்ணீருடன் கர்ப்பத்தை அறிவித்த வாள்வீச்சு வீராங்கனை

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் எகிப்திய வாள்வீச்சு வீராங்கனையான நடா ஹஃபீஸ், தான் 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.
நடா ஹஃபீஸ்
நடா ஹஃபீஸ்எக்ஸ் தளம்
Published on

கர்ப்பத்துடன் போட்டியிட்ட வாள்வீச்சு வீராங்கனை!

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரும் இடம்பிடித்துள்ளனர். இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்ஸில் எகிப்திய வாள்வீச்சு வீராங்கனையான நடா ஹஃபீஸ், தான் 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் ஃபென்சர் நடா ஹஃபீஸ். 26 வயதான இவர், வாள்வீச்சு வீராங்கனை. இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான தனிநபர் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற ஹஃபீஸ், அமெரிக்காவின் எலிசபெத் டார்டகோவ்ஸ்கிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 15-13 என வெற்றி பெற்று அவருக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால், அடுத்தசுற்றில் (ஜூலை 29) தென்கொரியாவின் ஜியோன் ஹயோங்கிடம் தோல்வியைத் தழுவினார். என்றாலும், இந்தப் பிரிவில் அவர் 16வது இடத்தைப் பிடித்தார். இது, அவரது சிறந்த தரநிலை ஆகும்.

இதையும் படிக்க: கையில் முத்தமிடாத சிறுவனை கன்னத்தில் அறைந்தாரா? சர்ச்சையில் சிக்கிய துருக்கி அதிபர்!

நடா ஹஃபீஸ்
”முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” - 58 வயதில் ஒலிம்பிக் மேடை! கனவை நனவாக்கிய சீன வீராங்கனை!

வைரலான கர்ப்பம் குறித்த இன்ஸ்டா பதிவு!

இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “போட்டிக் களத்தில் இரண்டு பேர் இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இங்கிருப்பது மூன்று பேர். ஆம்... நான், என்னுடைய போட்டியாளர் மற்றும் இன்னும் நம் உலகிற்கு வராத என்னுடைய குழந்தை.

என் குழந்தையும் நானும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உள்ள சவால்களில் சம அளவிலான பங்கைக் கொண்டுள்ளோம். கர்ப்பகாலம் ரோலர்கோஸ்டர் போல கடினமானது. ஆனால், வாழ்க்கை, விளையாட்டுகளின் சமநிலையை பராமரிக்கப் போராடுவது கடினமானது. இருப்பினும் அது மதிப்புக்குரியதாகும்.

16வது சுற்றில் எனது இடத்தைத் தக்கவைத்தது என்னை பெருமைப்பட வைக்கிறது என்பதைச் சொல்வதற்காக இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். எனது கணவர் இப்ராஹிம் மற்றும் எனது குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டதில் நான் அதிர்ஷ்டசாலி. இந்த ஒலிம்பிக் வேறுபட்டது; நான் மூன்றுமுறை ஒலிம்பியன். ஆனால், இந்த முறை ஒரு குட்டி ஒலிம்பியனை சுமந்துகொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவருடைய இந்தப் பதிவு வைரலான நிலையில், எகிப்திய பெண்களின் வலிமை மற்றும் திறன்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆனால், அதை ஒரு சிலர் இணையவாசிகள் விமர்சித்துள்ளனர். இதற்கும் நடா ஹஃபீஸ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர், ”எனது அன்பான தேசத்திற்கு, நான் என் கர்ப்பத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ​​எகிப்தியப் பெண்ணின் வலிமை மற்றும் விடாமுயற்சியின் மீது வெளிச்சம் போடுவதாக இருந்தது.

உலகத் தரவரிசையில் 7வது இடத்தில் இருக்கும் அமெரிக்க சாம்பியனுக்கு எதிராக வெற்றி பெற்றதன்மூலம், ஒரு எகிப்திய தடகள வீரர், மருத்துவர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக பெண் என்ன செய்ய முடியும் என்பதற்கான தெளிவான வெற்றி நிரூபணம் ஆகியுள்ளது. கர்ப்பமாக இருந்தபோது பங்கேற்ற ஒரே தடகள வீரர் நான் அல்ல; இன்னும் பல சர்வதேச சாம்பியன்கள் கர்ப்பத்துடன் விளையாடியிருக்கிறார்கள், அவர்களைத் தடுக்க எந்த மருத்துவக் கட்டுப்பாடுகளும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ‘பாஸ்போர்ட், விசா வேண்டாம்; இந்தியாவிற்கு சட்டவிரோதமாக நுழைவது எப்படி?’ யூடியூபரின் சர்ச்சை வீடியோ!

நடா ஹஃபீஸ்
ரஷ்யா, பெலாரஸ் நாடுகளுக்கு ஒலிம்பிக் கமிட்டி தடை| AIN என்றால் என்ன? கலந்துகொண்ட 32 நடுநிலை வீரர்கள்!

யார் இந்த நடா ஹஃபீஸ்?

மருத்துவத்தில் பட்டம் பெற்ற முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான நடா ஹஃபீஸ், தனிநபர் மற்றும் குழு வாள்வீச்சுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற மூன்று முறை ஒலிம்பியன் ஆவார். 2014இல், எகிப்து நாட்டின் தேசிய சீனியர் பெண்கள் சேபர் ஃபென்சிங் அணியில் சேர்ந்த ஹஃபீஸ், 2015இல், எகிப்திய மூத்த பெண்கள் சேபர் தேசிய குடியரசு போட்டியில் தனது முதல் வெற்றியைப் பெற்றார்.

ஃபென்சர் நடா ஹஃபீஸ்
ஃபென்சர் நடா ஹஃபீஸ்எக்ஸ் தளம்

அடுத்து, அல்ஜீரியாவில் நடந்த ஆப்பிரிக்க மண்டலத் தகுதி மூலம் 2016 ரியோ ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார். 2021இல், அவர் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெற்றார். பல ஆண்டுகளாக, அவர் 2018 ஆப்பிரிக்க மண்டல சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 2014 மற்றும் 2019இல் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றார். கூடுதலாக, அவர் பெல்ஜியம் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

இதையும் படிக்க: மினிமம் பேலன்ஸ் இல்லை... 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல்.. ராகுல் காந்தி கண்டனம்!

நடா ஹஃபீஸ்
வீடற்றவர்கள் விரட்டியடிப்பு | வன்முறையில் ஒலிம்பிக் நகரம்; ரசிகர்கள் தவிப்பு! பாரீஸில் நடப்பது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com