பாரிஸ் ஒலிம்பிக் 2024| வெண்கலப் பதக்க சுற்றுக்கு முன்னேறிய மனு பாக்கர், அர்ஜூன் சராப்ஜோத்!

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் மனுபாக்கர், அர்ஜூன் சராப்ஜோத் இணை வெண்கலப் பதக்கத்திற்கான சுற்றுக்கு முன்னேறி நம்பிக்கை அளித்துள்ளது.
மனுபாக்கர், அர்ஜூன் சராப்ஜோத்
மனுபாக்கர், அர்ஜூன் சராப்ஜோத்முகநூல்
Published on

செய்தியாளர் - சந்தானகுமார்

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் மனுபாக்கர், அர்ஜூன் சராப்ஜோத் இணை வெண்கலப் பதக்கத்திற்கான சுற்றுக்கு முன்னேறி நம்பிக்கை அளித்துள்ளது.

பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில், இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரின் மூன்றாவது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியின் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது இதில் இந்தியாவிற்காக பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் முதல் பதக்கத்தை வென்ற மனு பாக்கர்/ ARJUN SARABJOT இணை 580 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தனர்.

இதன் மூலம் வெண்கல பதகத்திற்கான சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மகளிருக்கான 10 மீட்டர் AIR RIFFLE பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை RAMITHA JINDAL 7வது இடம் பிடித்து வெளியேறினார் அதேபோல ஆண்களுக்கான 10 மீட்டர் AIR RIFFLE பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ARJUN BABUTA இறுதி நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து நான்காம் இடம் பிடித்தார்.

மகளிருக்கான இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தனிஷா மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை ஜப்பான் நாட்டின் NAMI,CHIHARU இணையிடம் 21- 11,21-12 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறினார்.

ஹாக்கியில் அர்ஜென்டினா இந்தியா இடையே நடைபெற்ற போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது கடந்த போட்டியில் இறுதி நிமிடத்தில் கோல் அடித்து இந்தியாவிற்கு வெற்றி தந்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இந்த போட்டியிலும் இறுதி நிமிடங்களில் கோல் அடித்து இந்திய போட்டியை டிரா செய்ய முக்கிய பங்காற்றினார்.

மனுபாக்கர், அர்ஜூன் சராப்ஜோத்
நூலிழையில் பறிபோன பதக்கம்.. இதயம் உடைந்த பட்டியலில் PT உஷா, மில்கா உடன் இணைந்த அர்ஜுன் பபுட்டா!

அதேபோல பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் SATWIK RANKIREDDY / CHIRAG SHETTY இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அவர்களுக்கு எதிராக விளையாட வேண்டிய ஜெர்மனி வீரர்கள் காயம் காரணமாக விலகியில் நிலையில் பிரான்ஸ் நாட்டின் Corvee/Labar's இணை இந்தோனேசியா நாட்டின் Rian/Fajar இணைக்கு எதிராக தோல்வி அடைந்தனர் இதன் மூலம் இந்தியாவின் SATWIK RANKI REDDY / CHIRAG SHETTY இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் லீக் சுற்றுப் போட்டியில் லக்ஷயா சென், பெல்ஜியத்தின் ஜூலியன் கராகியை எதிர்கொண்டார். இதில் 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியம் வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

வில்வித்தை ஆடவர் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி துருக்கி அணியை எதிர்கொண்டது. இதில் துருக்கி அணியிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com