“மோடிக்கு எதிராக பேசியவர் வினேஷ் போகத்..”!- விமர்சிக்கும் வகையில் பதிவிட்ட பாஜக எம்பி கங்கனா ரனாவத்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மோடிக்கு எதிராக பேசியவர் வினேஷ் போகத் என்று விமர்சிக்கும் வகையில் பாஜக எம்பி கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
vinesh phogat - kangana ranaut
vinesh phogat - kangana ranautweb
Published on

124 வருட இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு மல்யுத்த வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறை என்ற இமாலய சாதனையை படைத்த வினேஷ் போகத், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சர்வதேச அளவில் ஒருமுறைகூட தோல்வியே சந்திக்காத நம்பர் 1 வீராங்கனை ஜப்பானின் யூ சுசாகியை கடைசி 15 வினாடியில் வீழ்த்தி வரலாறு படைத்தார்.

அதேபோல காலிறுதி சுற்றில் 3 முறை காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை மற்றும் அரையிறுதிசுற்றில் பான் அமெரிக்கன் கேம்ஸ் 2023-ல் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்தார்.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்

உலக நம்பர் 1 வீராங்கனையையே வீழ்த்திவிட்டார் எப்படியும் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துவிடும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இந்தியர்கள் காத்திருந்தனர். ஆனால் எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் வினேஷ் போகத் கூடுதலாக எடையிருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vinesh phogat - kangana ranaut
களத்தில் சீறிப்பாய்ந்த ஈட்டி.. முதல் சுற்றிலேயே நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா!

எதனால் தகுதிநீக்கம்?

கடந்த காலங்களில் வினேஷ் போகத் விளையாடும் எடைப்பிரிவு 53 கிலோ. ஆனால், அதற்கு வேறொரு வீராங்கனை தகுதி பெற்றதால், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க முடிவு செய்த வினேஷ், அதற்காக 53 கிலோ எடையில் இருந்த தனது உடல் எடையை, 3 கிலோ குறைத்து போட்டிகளில் பங்கேற்றார். தகுதிச்சுற்றில் கூட பல இன்னல்களை சந்தித்த அவர், போராடி தான் 50 கிலோ எடைப்பிரிவில் தகுதி பெற்றார்.

ஒலிம்பிக்: வரலாறு படைத்தார் வினேஷ் போகத்
ஒலிம்பிக்: வரலாறு படைத்தார் வினேஷ் போகத்

பாரீஸ் ஒலிம்பிக்கில் 50கிலோ எடைப்பிரிவில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் பங்கேற்றதால், அவர் எடுத்துக்கொண்ட ஊட்டசத்துக்கள் காரணமாக, நேற்று இரவு முதலே தோராயமாக 2 கிலோ எடை அதிகரித்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே, இரவு முழுவதும் தூங்காமல், ஜாகிங், ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல் என அனைத்து பயிற்சிகளையும் செய்துள்ளார்.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்pt web

இந்நிலையில், இன்று இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு எடை சோதனை செய்யப்பட்டபோது, தேவையான எடையை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்துள்ளார். அதாவது 50 கிலோ 100 கிராம் இருந்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஒலிம்பிக் விதிமுறையின் படி கூடுதலாக எடையிருந்தால் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்படுகிறது.

vinesh phogat - kangana ranaut
இறுதி 15 வினாடியில் மாறிய போட்டி.. அரையிறுதியில் வினேஷ் போகத்! 4 முறை உலக சாம்பியனுக்கு முதல் தோல்வி

சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட வினேஷ் போகத்..

தங்கம் உறுதியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த இந்திய மக்களின் தலைமேல் இடியை இறக்கும் வகையில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், பாஜக எம்பி கங்கனா ரனாவத் வினேஷ் போகத்தை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். தகுதி நீக்க்ம் செய்வதற்கு முன்பாக, அதாவது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பின் அவர் இந்த இந்தப்பதிவை செய்திருந்தார்.

கங்கனா ரனாவத் இன்ஸ்டா பதிவு
கங்கனா ரனாவத் இன்ஸ்டா பதிவு

இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அவர், “ஒரு கட்டத்தில் போராட்டங்களில் பங்கேற்ற வினேஷ் போகத், மோடிக்கு எதிராக “மோடி தெரி கப்ர் குதேகி (modi teri kabr khudegi)” என்ற முழக்கங்களை எழுப்பினார். ஆனாலும் அவருக்கு தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் மற்றும் சிறந்த பயிற்சியும், பயிற்சியாளர்கள் மற்றும் வசதிகளும் வழங்கப்பட்டன. அதனால் தான் மோடி சிறந்த தலைவர்” என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்ட்விட்டர்

முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் எழுப்பிய வினேஷ் போகத், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர் வீராங்கனைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

vinesh phogat - kangana ranaut
‘தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டது’ to ‘IND-க்கு ஒலிம்பிக்’ அசாத்தியத்தை சாத்தியப்படுத்திய வினேஷ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com