ஓய்வை அறிவித்து விலகிய வீரர்! மகனின் ஆசைக்காக விளையாடி ஒலிம்பிக்கில் பதக்கத்தை தட்டிசென்ற தந்தை!

தனது ஆசைக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வெல்லும் வீரர்கள் இருந்தாலும், ஓய்வை அறிவித்து ஒலிம்பிக்கில் இருந்து விலகிய வீரர் ஒருவர், தனது மகனின் ஆசைக்காக மீண்டும் பங்கேற்று பதக்கத்தையும் தட்டிச்சென்றுள்ளார்.
டாம் DALEY.
டாம் DALEY. முகநூல்
Published on

செய்தியாளர்: சந்தானகுமார்

தனது ஆசைக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வெல்லும் வீரர்கள் இருந்தாலும், ஓய்வை அறிவித்து ஒலிம்பிக்கில் இருந்து விலகிய வீரர் ஒருவர், தனது மகனின் ஆசைக்காக மீண்டும் பங்கேற்று பதக்கத்தையும் தட்டிச்சென்றுள்ளார்.

டாம் DALEY சர்வதேச ஒலிம்பிக்கில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஒலிக்கும் ஒரு பெயர், இதுவரை ஒலிம்பிக்கில் 5 பதக்கங்களை வென்று இருந்தாலும் ஒரு ஆணை திருமணம் செய்தார் என்பதாலேயே இவர் பெயர் இன்னும் அதிகமாக பிரபலமாக மாறியது.

டாம் DALEY கிரேட் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். 14 வயதில் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கியவர். 2008 ஆம் ஆண்டு BEIJING ஒலிம்பிக்ஸ் தொடரில் 10 மீட்டர் தண்ணீர் சாகச விளையாட்டில் களமிறங்கினார். தனி பிரிவில் 7 மற்றும் 8 ஆம் இடம் பிடித்தார்.

தோல்வி அடைந்து பள்ளிக்கு திரும்பிய நேரத்தில் சக மாணவர்கள் அவரை கேலி செய்ததால், பள்ளி படிப்பை கைவிட்டார். 2011 ஆம் ஆண்டு தன்னுடைய தந்தை இறந்த நேரத்திலும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மீட்டர் தண்ணீர் சாகச விளையாட்டில் வெண்கலம் வென்றார்.

2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் தண்ணீர் சாகச விளையாட்டில் அணி பிரிவில் வெண்கலம் வென்ற இவர், 2020-ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீட்டர் தண்ணீர் சாகச விளையாட்டில் அணி பிரிவில் தங்கமும், தனி வீரர் பிரிவில் வெண்கலமும் வென்றார்.

2013ஆம் ஆண்டு Lance Black என்ற ஆணை திருமணம் செய்த இவருக்கு தற்போது வாடகைத்தாய் மூலமாக இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு பின் ஓய்வை அறிவித்து தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்த டாம் DALEY ஒரு ஆண்டுக்கு பின் சமூக வலைதளத்தில் ஒலிம்பிக் வீரராக உருவாகுவது எவ்வளவு கடினம் என்ற வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தார்.

டாம் DALEY.
பாரீஸ் ஒலிம்பிக்: காதலருடன் நைட் அவுட்டிங்.. நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட நீச்சல் வீராங்கனை!

அப்போது அவரது மகன், உங்களை மீண்டும் ஒலிம்பிக்கில் பார்க்க வேண்டும் என தனது விருப்பத்தை கூறியுள்ளார். மகனின் ஆசையை நிறைவேற்ற, ஒரு ஆண்டில் பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் போட்டிக்கு திரும்பியது மட்டும் இல்லாமல் தன்னுடைய இரண்டு மகன்கள் முன்னிலையில் வெள்ளிப் பதக்கம் வென்றும் அசத்தியுள்ளார் டாம் DALEY.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com