பாரிஸ் ஒலிம்பிக்ஸ் | வெண்கலம், வெள்ளியில் ஜொலிக்கும் கஜகஜஸ்தான், அமெரிக்க வீரர்கள்!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் முதல்நாளே 2 தங்கப்பதக்கங்களுடன் தனது பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது சீனா.
Huang Yuting, Sheng Lihao
Huang Yuting, Sheng Lihaopt web
Published on

10 மீட்டர் கலப்பு இரட்டையர் ஏர் ரைபிள் பிரிவில் உலக சாம்பியன்களாக இருக்கும் 17 வயதேயான Huang Yuting மற்றும் 19 வயதேயான Sheng Lihao இணை, இந்த ஒலிம்பிக் தொடரில் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இருப்பினும் பலம் வாய்ந்த தென் கொரியாவின் Keum Ji-hyeon and Park Ha-jun இணையை எதிர்த்து விளையாடியதால் இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

இருப்பினும் முதல் நான்கு சுற்றுகள் முடிவிலேயே சீனாவின் Huang Yuting and Sheng Lihao 6-2 என முன்னிலை வகிக்க கொரியா அணியின் பயிற்சியாளர் டைம் அவுட் எடுத்தார். இருப்பினும் தொடர்ந்து சீனாவின் Huang Yuting and Sheng Lihao இணை ஆதிக்கம் செலுத்தினர். தங்கம் வெல்ல இரண்டு புள்ளிகள் மட்டுமே இருந்த நிலையில் அடுத்தடுத்து 3 சுற்றுகளை தென் கொரியா வென்றனர். இதனால் போட்டி டை பிரேக்கர் சுற்றுக்கு செல்லும் என எதிர்பார்த்த நிலையில் சீனாவின் Huang Yuting, Sheng Lihao இணை 16-12 என்ற கணக்கில் தங்கம் வென்றனர்.

Huang Yuting, Sheng Lihao
ஒலிம்பிக் 2024| முதல் நாளிலேயே 2 தங்கப் பதக்கத்தைத் தட்டித் தூக்கிய சீனா

கஜகஜஸ்தான் அணியின் Alexandra Le Islam Satpayev இணை 17-5 என்ற கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றனர்.

Alexandra Le Islam Satpayev
Alexandra Le Islam Satpayev

மகளிர் இரட்டையர் 3 மீட்டர் நீர் சாகச போட்டியில் சீனாவின் Y.N. Chang, Y. Chen இணை தங்கம் வென்றது. இந்த இணை, 337.68 புள்ளிகள் பெற்று தங்கத்தைத் தட்டிச்சென்றது. அமெரிக்காவின் kassidi Cook, Sara Bacon இணை 314.64 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றனர். பிரிட்டனின் Y. Harper, S. Mew Jensen 302.28 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com