ஒலிம்பிக் 2024| முதல் நாளிலேயே 2 தங்கப் பதக்கத்தைத் தட்டித் தூக்கிய சீனா

பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவில், சீனா முதல் நாளிலேயே இரண்டு தங்கப் பதக்கங்களை அறுவடை செய்துள்ளது.
சீன வீரர்
சீன வீரர்எக்ஸ் தளம்
Published on

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் 33வது ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று (ஜூலை 26) கோலாகலமாகத் தொடங்கியது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் 32 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரும் இடம் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவின் தகுதிச் சுற்று இன்று (ஜூலை 27) 12.30 மணிக்கு தொடங்கியது. இதில் சீனா, தென்கொரியா, கஜகஸ்தான், ஜெர்மனி அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தன. முதல் இரண்டு இடங்களை பிடித்த சீனா- தென்கொரியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்திற்காக மோதின. கஜகஸ்தான்- ஜெர்மனி அணிகள் வெண்கல பதக்கத்திற்காக மோதின. வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் கஜகஸ்தான் 17-5 என ஜெர்மனியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது. சீனா- தென்கொரியா இடையிலான தங்க பதக்கத்திற்கான போட்டியில் சீனா 16-12 என தென்கொரியாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. இதன்மூலம பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றது சீனா. தென்கொரியா வெள்ளி பதக்கம் வென்றது.

இதையும் படிக்க: “சிரிப்பால் சரிசெய்யுங்க” - மெசெஜ் அனுப்பிய ராகுல் டிராவிட்... நெகிழ்ந்துபோன கவுதம் கம்பீர்!

சீன வீரர்
விழா கோலம் பூண்ட பாரீஸ் நகரம்!ஒலிம்பிக் அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்தி சென்ற இந்திய வீரர்கள்!

இதே பிரிவில் (10 மீட்டர் ஏர் ரைபிள்) இந்திய கலப்பு இரட்டையர் அணி தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் இணையும், ரமிதா - பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினர். ரமிதா - பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்தைப் பிடித்தனர். இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளைப் பெற்று 12வது இடம் பிடித்தனர்.

தகுதி சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு துப்பாக்கி சுடும் வீரருக்கும் 30 முறை சுட வாய்ப்பளிக்கப்படும். தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பதக்கம் வெல்லும் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் சீனா (632.2), தென்கொரியா (631.4), கஜகஸ்தான் (630.8), ஜெர்மனி (629.7) ஆகிய 4 நாடுகள் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கம் வெல்லும் போட்டிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, சீனா மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. பெண்களுக்கான டைவிங் ஸ்பிரிங்போர்டு போட்டியில் சீனாவின் சென், சாங் இணை 337.68 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வசமாக்கியுள்ளது.

இதையும் படிக்க: 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்: அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை படைத்த ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர்!

சீன வீரர்
வீடற்றவர்கள் விரட்டியடிப்பு | வன்முறையில் ஒலிம்பிக் நகரம்; ரசிகர்கள் தவிப்பு! பாரீஸில் நடப்பது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com