பாரீஸ் ஒலிம்பிக்: காதலருடன் நைட் அவுட்டிங்.. நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட நீச்சல் வீராங்கனை!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர், ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அனா கரோலினா வியேரா
அனா கரோலினா வியேராஎக்ஸ் தளம்
Published on

பாரீஸ் நகரில் நடைபெற்று 33வது ஒலிம்பிக் திருவிழா களைகட்டி வருகிறது. தொடக்க நாள் முதலே வீரர்களும் வீராங்கனைகளும் தங்களது திறமைகளை நிரூபித்து பதக்கங்களை வேட்டியாடி வருகின்றனர். ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டிருக்கும் வீரர்கள் பலருக்கும் பதக்கக் கனவே குறியாக இருக்கும் நிலையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர், ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் அனா கரோலினா வியேரா. இவர், அந்நாட்டின் நீச்சல் வீராங்கனையாக உள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற 4x100 மீட்டர் நீச்சல் ரிலே தகுதிச்சுற்றுப் போட்டியில் கரோலினா கலந்துகொண்டார். இந்த போட்டி நடப்பதற்கு முதல்நாள் இரவில் கரோலினா, அணியின் அனுமதியின்றி ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதுகுறித்த விசாரணையில், கரோலினா தனது காதலருடன் நேரம் செலவிடச் சென்றது தெரிய வந்துள்ளது. மேலும், தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் கரோலினா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: செல்பி எடுக்க முயன்ற ரசிகர்.. தள்ளிவிட்ட நடிகர் சிரஞ்சீவி.. வைரல் வீடியோவால் வலுக்கும் கண்டனம்!

அனா கரோலினா வியேரா
பாரிஸ் ஒலிம்பிக் 2024| வெண்கலப் பதக்க சுற்றுக்கு முன்னேறிய மனு பாக்கர், அர்ஜூன் சராப்ஜோத்!

இதையடுத்து, இந்த விவகாரம் பிரேசில் முகாமிற்கு தெரிய வந்து புகாரளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கரோலினா மன்னிப்பு கோராமல், தவறு செய்யவில்லை என்று வாதிட்டுள்ளார். ஆனால் அவரின் இன்ஸ்டாகிராமிலேயே ஆதாரம் இருந்ததாக நிர்வாகம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவர் உடனடியாக பிரேசிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

முன்னதாக, கரோலினா, தன் நாட்டு சக வீரரான கேப்ரியல் சான்டோஸையும் துணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேப்ரியல் சாண்டோஸ் தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளார். இதனால் அவர் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்காமல் பாரிஸ் ஒலிம்பிக் முகாமிற்கே திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கரோலினா, “நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும், ஒலிம்பிக் கிராமத்திலிருந்து அனுப்பப்பட்டேன். நான் அங்கிருந்து கிளம்பியதால் என் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இதுகுறித்து, நான் எனது வழக்கறிஞர்களிடம் பேசுவேன். எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்வதாக உறுதியளிக்கிறேன். நான் மிகுந்த வருத்தத்திலும் பதற்றத்திலும் இருக்கிறேன். ஆனால் நான் யாரென்று எனக்குத் தெரியும். என் குணம் மற்றும் என் இயல்பு என்னவென்று எனக்குத் தெரியும் என்பதால் தற்போது மன அமைதியுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த அனா கரோலினா வியேரா?

2020 கோடைகால ஒலிம்பிக்கில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்துகொண்டார். அதற்கு முன்பு பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற 2018 கோடைகால இளைஞர் ஒலிம்பிக் போட்டியிலும் அவர் கலந்துகொண்டார். யூத் ஒலிம்பிக்கின்போது, ​​பெண்களுக்கான 4x100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​​தொடர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அனா கரோலினா இந்த சாதனைக்குப் பிறகு பிரேசிலில் உச்சம் தொட்டார். ஏனெனில், சர்வதேச சாம்பியன்ஷிப்பில் பிரேசிலின் பெண்கள் பிரிவு, ரிலேயில் பதக்கம் வென்றது அதுவே முதல்முறையாகும்.

இதையும் படிக்க: பயனர் விவரங்களை கேட்ட விவகாரம்: இந்தியாவிலிருந்து வெளியேறும் வாட்ஸ்அப்? மத்திய அரசு சொன்ன பதில்!

அனா கரோலினா வியேரா
ரஷ்யா, பெலாரஸ் நாடுகளுக்கு ஒலிம்பிக் கமிட்டி தடை| AIN என்றால் என்ன? கலந்துகொண்ட 32 நடுநிலை வீரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com