விளையாட்டு
ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி
ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவு போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவின் சார்பில் ஹரியானாவைச் சேர்ந்த 23 வயது நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அவர் தனது முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரம் எறிந்து, முதல் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
சமீபத்தில் ஃபின்லாந்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா, வெண்கலப்பதக்கம் வென்றார். அந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 86.79 மீட்டர் தூரம் ஈட்டியை வீசியெறிந்திருந்தார்.