"முதல்வருக்கு வாளை பரிசாக கொடுத்தேன்; ஆனால்.." - முதல்வரை சந்தித்தபின் பவானி தேவி பேட்டி

"முதல்வருக்கு வாளை பரிசாக கொடுத்தேன்; ஆனால்.." - முதல்வரை சந்தித்தபின் பவானி தேவி பேட்டி
"முதல்வருக்கு வாளை பரிசாக கொடுத்தேன்; ஆனால்.." - முதல்வரை சந்தித்தபின் பவானி தேவி பேட்டி
Published on

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பியுள்ள வாள்ச் சண்டை வீராங்கனை பவானி தேவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‘’இப்போதுதான் முதன்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று இருக்கிறேன். இந்தியாவிலிருந்தும் வாள்வீச்சு போட்டியில் முதன்முதலாக பங்கேற்றதும் நான்தான். இது எனக்கும் தமிழகத்தும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

ஒலிம்பிக்கிற்கு செல்வதற்கு முன்பே தேர்வான அனைவரிடமும் இரண்டு முறை பேசி தேவையான உதவிகளை வழங்குவதாக முதல்வர் உறுதியளித்திருந்தார். இன்று அவரை சந்தித்து நான் ஒலிம்பிக்கில் பயன்படுத்திய வாளை பரிசாகக் கொடுத்தேன். ஆனால் அவர் மீண்டும் அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்த வாள் தேவை எனக் கூறி திரும்ப பரிசாக அளித்துவிட்டார். ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடியதாகக் கூறி பாராட்டினார்.

மின்சாரத்துறையில் நான் தற்போது வேலைசெய்து வருவது குறித்தும் கேட்டறிந்தார். அதன்பிறகு விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்தோம். அவரும் பாராட்டினார். அடுத்ததாக மின்துறை அமைச்சரையும் சந்திக்க இருக்கிறோம்’’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com