இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தி இங்கிலாந்து 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ரோரி பர்ன்ஸ், லாரண்ஸ் ஆகியோர் 81 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டேவன் கான்வே களமிறங்கினர். டாம் லாதம் 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய வில் யங் கான்வேயுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 137 ஆக இருந்தபோது டேவன் கான்வே 80 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வில் யங் 82 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 76.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. ராஸ் டெய்லர் 46 ரன்னுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து சார்பில் ஸ்டுவர்ட் பிராடு 2 விக்கெட்டும், டேனியல் லாரன்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.