ஆஸி.,க்கு எதிரான டி20: 1 ரன்னில் சதத்தை மிஸ் செய்த டேவான் கான்வே!

ஆஸி.,க்கு எதிரான டி20: 1 ரன்னில் சதத்தை மிஸ் செய்த டேவான் கான்வே!
ஆஸி.,க்கு எதிரான டி20: 1 ரன்னில் சதத்தை மிஸ் செய்த டேவான் கான்வே!
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 1 ரன்னில் சதத்தை நழுவவிட்ட நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே 99 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பீல்டிங் செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கமே சோதனையாக அமைந்தது. அந்த அணியின் மார்டின் கப்தில் ரன் ஏதும் எடுக்காமலும், டிம் சைப்ரட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து காப்பாற்றுவார் என நினைத்த கேப்டன் வில்லியம்சன் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணிக்கு சறுக்கல் ஏற்பட்டது. ஆனால் அடுத்து வந்த டேவான் கான்வே மிகச்சிறப்பாக விளையாடினார். அவருக்கு உறுதுணையாக கிளென் பிலிப்ஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவான் கான்வே 59 ரன்களில் 99 ரன்களை விளாசினார்.

அதில் மொத்தம் 3 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும். ஆனால் 1 ரன்னில் டெவான் கான்வே தன்னுடைய முதல் சதத்தை மிஸ் செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com