இந்திய வீரர்கள் ரவிசந்திரன் அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் காயம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீகில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.
ரவிசந்திரன் அஸ்வின் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் முரளி விஜய் கின்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் விளையாடுகின்றனர். இரண்டு வீரர்களும் ஐபிஎல் 10 வது சீசன் முழுவதும் காயம் காரணமாக போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தெரிகிறது. மேலும், பாடர் கவாஸ்கர் கோப்பையில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுலும் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார். ராகுல் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக தெரிவித்துள்ளார். மேலும், ரவீந்தர ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் ஐபிஎல் ட்தொடரின் முதல் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிகிறது.