மின்வெட்டால் நோ டிஆர்எஸ்! சீட்டுக்கட்டு போல சரிந்த சிஎஸ்கே! மும்பைக்கு 98 ரன்கள் இலக்கு!

மின்வெட்டால் நோ டிஆர்எஸ்! சீட்டுக்கட்டு போல சரிந்த சிஎஸ்கே! மும்பைக்கு 98 ரன்கள் இலக்கு!
மின்வெட்டால் நோ டிஆர்எஸ்! சீட்டுக்கட்டு போல சரிந்த சிஎஸ்கே! மும்பைக்கு 98 ரன்கள் இலக்கு!
Published on

சென்னை அணியின் பேட்டர்களில் ஒருவராவது நிலைத்து நின்று தோனியுடன் ஆடியிருந்தால், கவுரமான ஸ்கோரை அணி எட்டியிருக்கும். 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க கட்டாய வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கி விளையாடி வருகிறது சென்னை அணி. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங் தேர்வு செய்தார்.

வான்கடே மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சில நிமிடங்கள் தாமதமாகவே டாஸ் போடப்பட்டது. அதன் காரணமாக டிஆர்எஸ் இல்லை எனவும் ஆட்டம் துவங்கும்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மின்வெட்டு சென்னை டாப் ஆர்டரை துவம்சம் செய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரில் கான்வே பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

வான்கடே மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சில நிமிடங்கள் தாமதமாகவே டாஸ் போடப்பட்டது. அதன் காரணமாக டிஆர்எஸ் இல்லை எனவும் ஆட்டம் துவங்கும்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மின்வெட்டு சென்னை டாப் ஆர்டரை துவம்சம் செய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரில் கான்வே பேட்டிங் செய்து கொண்டிருந்தார். சாம்ஸ் வீசிய 2வது பந்து கான்வேவின் பேட்டினை தாண்டிச் சென்று அவரது பேடில் பட்டது. மும்பை வீரர்கள் எல்பிடபுள்யூ கேட்டு கத்த, கள நடுவர் அவுட் என அறிவித்தார்.

கான்வே டிஆர்எஸ்(DRS) கோர முற்பட்டபோது, மின்வெட்டால் தற்போது அந்த வசதி இல்லை என நடுவர்கள் தெரிவித்தனர். கள நடுவர் அளித்த தீர்ப்பே இறுதியானதால் கோல்டன் டக் ஆகி வேறு வழியின்றி பெவிலியன் திரும்பினார் டெவான் கான்வே! இடையில் சற்று நேரம் நடுவரிடம் கான்வே மற்றும் கெய்க்வாட் முறையிட்டுக் கொண்டிந்தார். அப்போது நடுவர்களிடம் வந்த மும்பை அணி கேட்பன் ரோகித் சர்மா ஏதோ ஆவேசமாக பேசினார். அத்துடன், அருகில் நின்று கொண்டிருந்த கெய்க்வாட் இடமும் ஏதோ பேசினார். அவர் முறையிட்ட பின்னர்தான் கான்வே பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

இதையடுத்து மொயின் அலியும் சாம்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகி நடையைக் கட்ட, உத்தப்பாவுக்கும் வில்லனாக வந்தது மின்வெட்டால் தடைபட்ட டிஆர்எஸ். பும்ரா வீசிய பந்தில் உத்தப்பாவும் எல்.பி.டபுள்யூ விக்கெட் என அறிவிக்கப்பட்டார். நடுவருடன் உத்தப்பாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோதிலும், டிஆர்எஸ் இல்லாததால் அவரும் வெளியேறினார். ஆனால் உத்தப்பா அவுட் ஆன பந்து சரியாக ஆஃப் ஸ்டம்பை பதம்பார்க்கும் வகையில் வீசப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், கான்வேவிற்கு லெக் சைடில் மிஸ் ஆக வாய்ப்பு இருப்பதுபோல் தோன்றியது. ஒருவேளை டிஆர்எஸ் வாய்ப்பு இருந்திருந்தால் அவுட் ஆகாமல் இருந்திருக்கலாம். சென்னையும் 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்க்காது.

அடுத்து இணை சேர்ந்த கெய்க்வாட் மற்றும் ராயுடு சில பவுண்டரிகளை விளாசி நம்பிக்கை அளித்தனர். ஆனால் அந்த நம்பிக்கையில் இடியை இறக்கினார் டேனியல் சாம்ஸ். கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தி சென்னையின் டாப் ஆர்டரை 5 ஓவர்களுக்குள் தரைமட்டமாக்கினார் சாம்ஸ். அடுத்து டெத் ஓவர்களில் களமிறங்கும் ஃபினிஷர் தோனி, பவர்பிளேவில் களமிறங்கினார். ராயுடுவுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் மெரிடித் பந்துவீச்சில் ராயுடு அடித்த பந்து எட்ஜ் ஆகி இஷானிடம் சிக்கியது. இதனால் பவர்பிளே முடியும்போது 32 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை தடுமாறியது. அடுத்து வந்த சிவம் துபேவும் வந்த வேகத்தில் இரண்டு ஷாட்களை அடித்து பின் நடையைக் கட்ட, ஒற்றை ஆளாக போராடிக் கொண்டிருந்தார் தோனி. அடுத்து வந்த பிராவோ நிதானமாக ஆட, தோனி பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

குமார் கார்த்திக்கேயா பந்துவீச்சில் பிராவோவும் சிக்ஸர் விளாசி அதிரடிப் பாதைக்கு திரும்பினார். ஆனால் அவர் வீசிய அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அடுத்து சிம்ரஜித் சிங், மகேஷ் தீக்‌ஷனா ஆகியோர் வந்த வேகத்தில் அவுட்டாகி, பெவிலியனுக்கு ஃபேஷன் ஷோ நடத்தினர். அடுத்து வந்த முகேஷ் சவுத்ரி சில நிமிடங்கள் தாக்குப் பிடித்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேற 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது சிஎஸ்கே.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் 2வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். முதல் குறைந்தபட்ச ஸ்கோரும் மும்பைக்கு எதிராகவே சென்னை அணி எடுத்திருந்தது. 2013 ஆம் ஆண்டில் மும்பைக்கு எதிராக 79 ரன்களுக்குள் சுருண்டது சிஎஸ்கே.

ஐபிஎல்லில் சிஎஸ்கேயின் குறைந்த ஸ்கோர்:

மும்பைக்கு எதிராக 79 (2013)
மும்பைக்கு எதிராக 97 (2022)
ராஜஸ்தானுக்கு எதிராக 109 (2008)
மும்பைக்கு எதிராக 109 (2019)
டெல்லிக்கு எதிராக 110/8 (2012)

தோனி மட்டும் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் சேர்த்திருந்தார். 33 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசி இருந்தார். சென்னை அணியின் பேட்டர்களில் ஒருவராவது நிலைத்து நின்று தோனியுடன் ஆடியிருந்தால், கவுரமான ஸ்கோரை அணி எட்டியிருக்கும். தற்போது 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com