ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி? - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்

ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி? - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்
ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி? - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்
Published on

தோனியின் ஓய்வுப் பற்றி வெளியாகியுள்ள தகவலில் உண்மையில்லை என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.

கேப்டன் விராட் கோலி இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி குறித்து பதிவிட்டிருந்தார். தோனியுடன், விராட் கோலி வெற்றிக் களிப்பில் இருப்பது போல் படத்தை பதிவிட்டார். அத்துடன், “என்னால் மறக்க முடியாத ஒரு போட்டி. ஸ்பெஷலான இரவு. பிட்னஸ் தேர்வைப் போல் இந்த மனிதர்(தோனி) என்னை ஓட வைத்தார்” என்றும் அந்த ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். 

விராட் கோலியின் இந்த ட்வீட்டர் பதிவு, தோனி தன்னுடைய ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் புரிந்துக் கொண்டனர். இதனையடுத்து, கோலியின் ட்விட்டர் பதிவுக்கு ரசிகர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். தோனி தன்னுடைய ஓய்வு அறிவிப்பை தற்போது வெளியிட வேண்டாம் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், ஓய்வு குறித்து தோனி எந்தவொரு தகவலையும் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இதனை அவர் தெரிவித்தார்.

தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்ற நிலையில், தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com